என்னங்க தமிழ் பிக் பாஸ், தெலுங்குல இதே டாஸ்க் தான். ஆனால், எப்படி தெறிக்கவிடுறாங்க பாருங்க.

0
6297
BB
- Advertisement -

விரைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை இருந்து வருகிறது. தமிழை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழைப் போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நான்காவது சீசன் எட்டி இருக்கிறது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியே துவங்கிவிட்டது. ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

-விளம்பரம்-

இதிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தனிப்பட்ட முறையில் யாரிடமும் பாசம் காட்டாமல் டாஸ்க் என்று வந்துவிட்டால் போட்டியாளர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். அதேபோல டாஸ்க் என்று வந்துவிட்டால் நட்பு, பாசம் இதை பற்றி எல்லாம் பார்க்காமல் அடித்து வெளுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் தமிழ் பிக் பாஸ்ஸை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து அரசர் மற்றும் அரக்கர்களாக மாறி இருக்கிறார்கள். இதில் அரசர்களை அரக்கர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தொல்லை செய்யலாம். அதற்கு அரசர்கள் எதுவும் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோமோ பார்க்கும் போது இதில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் அடக்கி வாசிப்பது போலத்தான் இருக்கிறது.

ஆனால் தெலுங்கிலும் இன்று இதே டாஸ்க் தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தெலுங்கு பிக்பாஸில் அரக்கர்களால் இருக்கும் போட்டியாளர்கள் எதற்கும் அடங்காமல் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு பந்தாடி இருக்கிறார்கள். அந்த அம்மாவை பார்க்கும் போது பிக் பாஸ் வீட்டில் இன்று எக்கச்சக்க சண்டைகள் நடக்கும் என்பது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஒரே ஒரு சந்தேகம் ,தெலுங்கிலிருந்து தமிழில் இந்த டாஸ்கை காப்பி அடித்தார்களா, இல்லை தமிழிலிருந்து தெலுங்கில் இந்தக் டாஸ்க்கை காப்பி அடித்தார்களா என்பதுதான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement