தமிழ் பிக் பாஸ்ல இதுக்கே இவ்ளோ சண்ட, அப்போ தெலுங்குல இவங்க பண்ற மாதிரி எல்லாம் பண்ணா என்ன நடக்கும்.

0
1635
telungu
- Advertisement -

விரைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை இருந்து வருகிறது. தமிழை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழைப் போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நான்காவது சீசன் எட்டி இருக்கிறது. நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதியே துவங்கிவிட்டது. ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இந்த நிகழ்ச்சி மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

-விளம்பரம்-

இதிலுள்ள போட்டியாளர்கள் அனைவருமே தனிப்பட்ட முறையில் யாரிடமும் பாசம் காட்டாமல் டாஸ்க் என்று வந்துவிட்டால் போட்டியாளர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். அதேபோல டாஸ்க் என்று வந்துவிட்டால் நட்பு, பாசம் இதை பற்றி எல்லாம் பார்க்காமல் அடித்து வெளுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்த சீசனில் தமிழ் பிக் பாஸ்ஸை விட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து அரசர் மற்றும் அரக்கர்களாக மாறி இருக்கிறார்கள். இதில் அரசர்களை அரக்கர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தொல்லை செய்யலாம். அதற்கு அரசர்கள் எதுவும் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் யாரையும் தொடாமல் விளையாட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதற்கே நேற்று பாலாஜிக்கும் சுரேஷுக்கு முட்டிக்கொண்டது. அதே போல இன்று வெளியான ப்ரோமோவில் சனம் ஷெட்டி மீது சுரேஷ் ;தண்டயத்தினால் லேசாக தட்டியதற்கே சனம், சுரேஷ் சக்ரவத்தியை வாடா போடா என்று கிழித்து விட்டார். ஆனால், இதே டாஸ்க் தான் தெலுங்கிலும் சென்று கொண்டு இருக்கிறது. அங்கே அவர்கள் மஞ்சள் பூசுவதும், ஐஸ் கட்டியை போடுவதும், வாயை கட்டுவதும் என்று அரக்கர்கள் செம ரகளை செய்து வருகின்றனர். இதெல்லாம் தமிழ் பிக் பாஸில் நடந்தால் என்ன நடக்குமோ.

-விளம்பரம்-
Advertisement