கமல் கொடுத்த பார்ட்டிக்கு..மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, நித்யா, மமதி, ஆனந்த் வைத்தியநாதன் ஏன் வரவில்லை.? வெளிவந்த காரணம்.!

0
706
Bigg-boss
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்று கிழமையுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்த சீசனில் ரித்விகா வின்னராகவும், ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த ஐஸ்வர்யா ரன்னராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

-விளம்பரம்-

Bigg-boss-tamil

- Advertisement -

கோலாகலமாக முடிந்த இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கமல் அவர்கள் போட்டியாளர் அனைவருக்கும் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். மேலும், நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டது போலவே போட்டியாளர் அனைவருக்கும் புதிய விவோ ஸ்மார்ட் போனையும் அன்பளிப்பாக வழங்கினார்.

மேலும், இந்த பார்ட்டியின் போது மதுக்களும் பரிமாறபட்டுள்ளது என்று செய்திகளும் பரவியது. இந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தின் மூலம் யாஷிகா, ஐஸ்வ்ர்யா, மும்தாஜ், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன் ஆகியோர் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று தெரியவந்தது.

-விளம்பரம்-

Mumtaj

இவர்கள் கலந்து கொள்ளதாக காரணத்தை பற்றி விசாரித்த போது மும்தாஜிற்கு உடல் நிலை ஒத்துழைக்காததால் அவர் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே உடல் நிலை சரியில்லாமல் தான் இருந்து வந்துள்ளார் மும்தாஜ் ஆனால், ரசிகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

அதே போல அனந்த் வைத்யநாதன் பொதுவாக பார்ட்டி போன்ற விசயங்களில் நாட்டம் இல்லாததால் அவரும் கலந்துகொள்ளவில்லையாம். மேலும், யாஷிகா தற்போது படப்பிடிப்புகளில் கொஞ்சம் பிஸியாக இருந்து வருவதால் இந்த பார்ட்டிக்கு வரவில்லை என்றும் தனது நெருங்கிய தோழியே செல்லவில்லை என்பதால் ஐஸ்வர்யாவும் இந்த பார்ட்டிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

Aishwarya-Yashika

மேலும், மமதி மற்றும் நித்யா ஆகிய இருவரும் ஒரு சில தவிர்க்கமுடியாத காரணத்தால் இந்த பார்ட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நித்யா செல்லவில்லை என்றாலும் இந்த பார்ட்டிக்கு பாலாஜி சென்றிருந்தார்.

Advertisement