‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ – இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ? டபுள் ஏவிக்ஷன் இருக்கிறதா ? இதோ தகவல்.

0
436
biggboss
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்காக நாமினேஷன் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 82 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே நதியா சங் வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is biggboss-7.jpg

அவரை தொடர்ந்து அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி, ஐக்கி பெரி , அண்ணாச்சி, அபிநய் என்று அடுத்தடுத்து 10 பேர் வெளியேறினார்கள். இப்படி இருக்க தற்போது பிரியங்கா, ராஜு, வருண், அக்ஷரா, சிபி, தாமரை, பாவனி, அமீர், சஞ்சீவ், நிரூப் என்று இன்னும் 10 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் :

இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் தாமரை தலைவராக இருந்ததால் அவர் தப்பித்துவிட்டார். அதே போல இந்த வாரம் நடைபெற்ற நாமிநேஷனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வாரம் பிரியங்கா, அக்ஷரா, சிபி, நிரூப், வருண், பாவனி ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.

யார் வெளியேற்றம் :

இதில் கண்டிப்பாக பிரியங்கா காப்பாற்றப்பட்டுவிடுவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், மீதம் இருந்த 5 பேரில் யார் வெளியேறுவார் என்பதை கணிக்க முடியாத அளவு இருந்து வருகிறது. பொதுவாக எலிமிநேஷன் பற்றிய தகவல்கள் சனிக்கிழமை தான் கசிய துவங்கும். ஆனால், இந்த வாரம் வெள்ளிக்கிழமையே எலிமினேஷன் பற்றிய தகவல் கசிந்துவிட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-213.jpg

அக்ஷரா வெளியேற்றம் :

அதுவும் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து சிபி வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், பிக் பாஸை பொறுத்த வரை எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பதை போல சிபி வெளியேறவில்லை. தற்போது வந்த தகவலின்படி இந்த வாரம் அக்ஷரா வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil 5, October 10, highlights: Akshara Reddy suffers an  emotional breakdown after the weekend episode with Kamal Haasan - Times of  India

டபுள் ஏவிக்ஷனா ?

இந்த வாரம் முழுதும் பல்வேரு தனியார் வலைதளத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் கடைசி இடத்தில் வருண் மற்றும் நிரூப் தான் மாறி மாறி இடம்பெற்று வந்தனர். ஆனால், அக்ஷரா வெளியேறியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி தான். மேலும், இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்று கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement