நீங்களே வாங்க கமல் சார், ரம்யா கிருஷ்ணன் ஒர வஞ்சனை காமிக்கிறாங்க – கதறும் நெட்டிசன்கள்.

0
337
kamal
- Advertisement -

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது குறித்து சேனல் தரப்பில் விவாதமும் போய்க்கொண்டிருக்கிறது. அவர்கள் கமல் சாரிடம் கலந்து ஆலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பதாக கூறி இருந்தனர்.

இதையும் பாருங்க : கலைஞர் குடும்பத்தில் அடுத்த வாரிசு – மீண்டும் அப்பாவானார் உதயநிதி. என்ன குழந்தை தெரியுமா ?

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் எவிக்ஷன் மட்டும் இல்லாமல் வழக்கம் போல் அந்த 2 நாட்களும் நடக்கிறதை ஒளிபரப்பலாம் என்று கூறப்பட்டது. அதே போல கமல் வீட்டிலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒளிபரப்பலாம் என்று இரண்டு கோணத்தில் விஜய் டிவி பிக் பாஸ் குழு தீவிர ஆலோசனை செய்து கொண்டிருந்தது. ஆனால், கமல் கண்டிப்பாக கொரோனா தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதே போல கமலின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிட் சூழலில் தொடர்ந்து பேசுவது தொண்டைக்கு நல்லதல்ல என்று அறிவுரை கூறி இருக்கின்றனர். அதே போல விர்ச்சுவலில் நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சில டெக்கனிகள் பிரச்சனைகள் எழலாம் என்பதால் இந்த முடிவை விடுத்து, தற்போது கமலுக்கு பதிலாக வேறு யாரையாவது வைத்து தொகுத்து வழங்கலாம் என்று சேனல் தரப்பு திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி இருந்தார்.

-விளம்பரம்-

ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன், பிக் பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் ரம்யா கிருஷ்ணன். இதனால் இவரது பிக் பாஸ் ஆங்கரிங்க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் இவரது ஆங்கரிங் ஸ்டைல் ஒருதலைபட்சமாகவே இருந்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதே போல கமல் இல்லாத குறையை தீர்க்க நேற்றய நிகழ்ச்சியில் கூட முதல் முறையாக குறும்படம் போடப்பட்டது. ஆனால், அந்த குறும்படம் கூட எதோ ஒப்புக்கு சப்பான் போல தான் இருந்தது. இந்த நிலையில் கமலின் அருமை தற்போது தான் தெரிகிறது. விரைவில் கமல் குணமாகி மீண்டும் பிக் பாஸுக்கு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement