மலேசியா மானத்த வாங்கிட்டிங்க – நாதியா சொன்னது எல்லாம் பொய், வீடியோ வெளியிட்ட மலேசிய தமிழர்.

0
66064
nadia
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல புதிய மாற்றங்களுடன், 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது. வழக்கம் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே வீட்டுக்குள் சலசலப்பு தொடங்கியது. மேலும், முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பல சுவாரசியமான விஷயங்களை கூறினார்கள்.

-விளம்பரம்-

அந்தவகையில் நதியா சாங்கும் தன்னுடைய கடந்து வந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்தார். அதில் அவர் தான் சிறுவயதில் இருந்து மிகவும் கஷ்டப்படுவதாகவும், தன்னுடைய அம்மா தன்னை அடித்து கொடுமைப்படுத்தி துன்புறுத்தி இருக்கிறார் என்றும், ஒருமுறை போலீஸ் இடம் கூட தன்னை அடி வாங்க வைத்துள்ளார் என்றும் கூறியிருந்தார். பின் தன்னுடைய 15 வயதில் இருந்தே வீட்டு வேலை செய்ய அனுப்பி வைத்தார் என்றும் அங்கு கூட பாரபட்சம் பார்க்காமல் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

அப்படி ஒரு நாள் தன்னை அடிக்கும் போது தான் தன் கணவர் சாங்க் பார்த்ததாகவும், அதற்குப் பிறகு தன் அம்மாவை எதிர்த்து என்னை திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறியிருந்தார். அதோடு என் கணவருக்கு தமிழ் பேச தெரியாது அவர் சைனீஸ் என்றும் கூறியிருந்தார். இப்படி இவர் பேசிய விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இவர் கூறிய விஷயத்தை கேட்டு மலேசியா நபர் ஒருவர் வீடியோ ஒன்று போட்டுள்ளார்.

அதில் அவர் நதியா சாங்கை கழுவிக் கழுவி ஊற்றியுள்ளார். அதில் அவர் கூறியது, எங்களை எல்லாம் பார்ப்பதற்கு எப்படி இருக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரிகிறதா? எது சொன்னாலும் கேட்டுட்டு பேசாமல் இருப்பார்கள் என்று நினைத்தீர்களா? சரி மலேசியாவில் இருந்து ஒரு பெரிய தொலைக்காட்சிக்கு போய் இருக்கிறார். அதனால் நல்லதோ கெட்டதோ அவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று இருந்தால் ஒட்டுமொத்த மலேசியா மானத்தையும் வாங்கி இருக்கிறார் நதியா சாங்க். அதோடு மலேசியா போலீஸ்ஸையும் அவமானப்படுத்தி இருக்கிறார். இது பற்றி நதியா சாங்க் குடும்பத்தார் அவரை பற்றி இன்டர்வியூ கொடுத்தால் நன்றாக இருக்கும்.

-விளம்பரம்-

மலேசியாவிலும் சரி உலகத்தில் எந்த நாட்டிலும் சரி 18 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு வேலை தர மட்டார்கள். அதுவும் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலையை இவர் செய்தாராம். அதேபோல் போலீஸார் 15 வயது கீழ் இருந்த உங்களை உங்க பெத்தவங்க முன்னாடி அடிச்சாங்களாம். நம்ம மலேசியா போலீஸ் அந்தளவுக்கு கீழ்த்தனமானவங்க கிடையாது. நாங்களும் தான் சின்ன வயதில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருக்கோம். ஆண் பிள்ளை எங்களுக்கே சாப்பாடு தண்ணி எல்லாம் வாங்கி தந்து மரியாதை கொடுத்தார்கள். ஆனால், பெண் உங்களை அடித்தார்களா? அப்புறம் என் புகழ் எல்லாம் சாங்க் தான் சொன்னாங்க.

உண்மையிலேயே அவர் என் ஏரியாவில் தான் இருக்காரு. அதுமட்டும் இல்லைங்க என் நண்பரோடா நண்பர் தான் சாங்க். அதோட அவர் சைனீஸ்காரர் எல்லாம் இல்லை. அவர் நல்லா சரளமாக தமிழ் பேசுவார். இதெல்லாம் எதுக்கு நான் சொல்றேன்னா, நதியா சாங்க் மலேசியா மானத்தை வாங்கியது எனக்கு கோபமாக இருக்கிறது. இந்தியா போட்டியாளர்கள் மட்டும் தங்களுடைய பெற்றோர்களை விட்டுக் கொடுத்து பேசுவதில்லை.

ஆனால், மலேசியா போட்டியாளர்கள் ஒன்று அப்பாவை விட்டுக் கொடுக்கிறார்கள் இல்லை அம்மாவை வீட்டு கொடுத்து பேசுகிறார்கள். என்னா தான் தாய் தந்தை கெட்டவர்களாக இருந்தாலும் இவர்களைப் பற்றி கேவலமாக பேசக்கூடாது. எனக்கு தெரிந்த வரைக்கும் நதியா சாங்க் அம்மா, அப்பா ரொம்ப தங்கமானவர்கள். நதியா சாங்க் சொன்னது அனைத்துமே பொய்யான விஷயம். ஓட்டுக்காக இப்படி எல்லாம் ஒரு பொய்யான தவறான விஷயத்தை பேசக்கூடாது என்று கூறி இருந்தார்.

அதே போல நதியாவின் இன்ஸ்டா பதிவு ஒன்றில் தன் அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள நதியா, உங்களைப் போலவே என்னுடைய குடும்பத்திற்கு நான் ஒரு ரோல் மாடலாக மாறுவேன் என்று நம்புகிறேன். உங்களுக்கு நான் எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும் நான் உங்களுக்கு சிறப்பானவளாக இருந்து இருக்கிறேன். உங்கள் அன்பு மிகவும் சிறந்தது. இரும்பு பெண்ணிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement