பிக் பாஸ் OTTயில் வனிதா, மேலும் சீசன் 1ல் இருந்து மட்டும் 4 போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். யார் யார் ?

0
791
vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருந்தனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபி, 12 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறிவிட்டார். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் நிரூப் இரண்டாவது போட்டியாளராக நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார். இந்த வாரம் ஒருவர் வெளியேற இருக்கும் நிலையில் அடுத்த வாரம் 5 பேர் இறுதி வாரத்திற்கு செல்ல இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அடுத்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டே மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. தமிழைப் போல பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் தமிழ் OTT :

இதில் இந்தியில்தான் 15 வருஷங்களுக்கு மேல் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் இந்தி bigboss நிகழ்ச்சிக்கு பின்னர் தான் மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பிக் பாஸை பார்த்து தான் மற்ற மொழிகளில் காப்பி அடிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு.

24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம்

Voot Ottயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் 13 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 42 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மேலும், இது Voot Ottயில் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் Voot சந்தாதாரகர்கள் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்கலாம். அதாவது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும்.

-விளம்பரம்-

இந்த 5 பேர் மட்டும் Not Allowed :

தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியில் தமிழிலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழில் ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் கலந்துகொண்ட சீசன் 1 முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், ஏற்கனவே பிக் பாஸ்ஸில் 5சீசனில் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

Bigg Boss Tamil Season 1 Winner & Details | Contestants List - News Bugz

முதல் சீசனில் இருந்து மட்டும் 4 பேர் :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் மிக முக்கியமாக பிக் பாஸ் சீசன் 3யில் வத்துக்குச்சி என்று பட்டப் பெயர் எடுத்த வனிதா கலந்துகொள்ள இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சீசன் 1ல் இருந்து மட்டும் 4 போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்களாம். இதில் குறிப்பாக ஜூலி, பரணி, சுஜா, ஓவியா, சினேகன் ஆகியோர் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement