வேலைய ஆரம்பிக்கலாமா ? மாஸ் வசனத்துடன் கமல் – வெளியான பிக் பாஸ் 4 ப்ரோமோ.

0
2050
biggboss
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் 20 நபர்களை வைத்து ஷூட்டிங்கைத் தொடங்கலாமென அரசு அறிவித்திருந்தது. அந்த எண்ணிக்கை போதாது எனத்  சீரியல் தயாரிப்பாளர்களான நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தற்போது 60 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், பிக் பாஸ் போன்ற மாபெரும் ரியாலிட்டி ஷோ இப்படி 60 பேரை வைத்து நடத்த முடியாது என்று கூறியிருந்தது பிக் பாஸ் தரப்பு. வழக்கமாக ஜூன் மாதம் வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விடும். ஆனால், ஆகஸ்ட் மாதம் நிறைவடைய போகும் நிலையில் இதுவரை பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு கூட இன்னும் நடக்கவில்லை.

- Advertisement -

இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் நடுவராக கமல் தான் பங்குபெற போகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இருப்பினும் 400 பேர் பணியாற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது உள்ள சுழலில் நடத்துவது என்பது கடினம் தான். ஆனால், ஏற்கனவே சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்து இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. தெலுங்கில் ஏற்கனவே ப்ரோமோ எல்லாம் வந்து விட்டது.

ஆனால், தமிழில் இதுவரை பிக் பாஸ் 4 பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த சீஸனின் ப்ரோமோ ஷூட்ங்கில் கமல் பங்கு பெற்று உள்ளாராம். அந்த ப்ரோமோ செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் பிக் பாஸ் சீசன் 4-ன் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement