பிக் பாஸ் சீசன் 7ல் கம்மி சம்பளம் வாங்கும் வனிதா மகள் முதல் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

0
2285
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் வாங்கி இருக்கும் சம்பள விவரம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். ஞாயிற்று கிழமை வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். நேற்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது. முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். வழக்கம்போல் முதல் நாளில் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் விவாதம் தொடங்கிவிட்டது.

முதல் நாள் நிகழ்ச்சி:

அந்த வகையில் காலையில் ஜோவிதாவிற்கு சீனியர் நடிகர்கள் பலருமே படிப்பை பற்றி அறிவுரை செய்திருந்தார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் ஜோவிதா அமைதியாக இருந்தார். இப்படி முதல் நாளே நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று இருந்தது. பின் முதல் வாரத்திற்கான நாமினேஷனை செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார். அந்த வகையில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்:

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்திருக்கும் போட்டியாளர்கள் வாங்கும் சம்பள விபரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வனிதாவின் மகள் ஜோவிகா- ஒரு எபிசோடுக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

நடிகை அக்ஷயா உதயகுமார்- ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

மாயா கிருஷ்ணன்- ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ஐஷு- ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

youtube பிரபலம் பூர்ணிமா ரவி – ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

அனன்யா ராவ் -ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம்- ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை-ஒரு எபிசோடுக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

விஜய் வர்மா-ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

கூல் சுரேஷ் -ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரன்-ஒரு எபிசோடுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ராப் பாடகர் நிக்சன் – ஒரு எபிசோடுக்கு 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

கவின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி – ஒரு எபிசோடுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

நடன கலைஞர் மணிச்சந்திரா- ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

சீரியல் நடிகர் விஷ்ணு- ஒரு எபிசோடுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

பிரபல நடிகை விசித்ரா- ஒரு எபிசோடுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

சின்னத்திரை நடிகை ரவீனா- ஒரு எபிசோடுக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவி- ஒரு எபிசோடுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

Advertisement