பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த புது அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் ஒளிபரப்பி இருந்தார்கள். அதற்குப் பிறகு தான் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்திருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி பல பேரின் கேரியருக்கு துணையாகவும், பல பேரின் வாழ்க்கையும் மாற்றி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
மேலும், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்கள் கடந்து சில மாதங்களுக்கு முன் தான் கோலாகலமாக முடிவடைந்தது. இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரபரப்பாக சென்றது. கடந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருந்தது. அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இது பிக் பாஸ், சுமால் பாஸ் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு புது விதிமுறைகள் எல்லாம் போடப்பட்டிருந்தது. அதோ இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டை எல்லாம் மிகப்பெரிய அளவில் விவாதமாகவே சோசியல் மீடியாவில் பேசப்பட்டிருந்தது.
பிக் பாஸ் சீசன் 8 அப்டேட்:
குறிப்பாக, பிரதீப்பிற்கு ரெட் கார்ட் விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. பலரும் கமலை தான் வறுத்து எடுத்து இருந்தார்கள். இறுதியில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருந்தார்கள். இந்த நிலையில் ‘பிக்பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியாளர்கள் பட்டியல்:
கூடிய விரைவிலேயே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது போட்டியாளர்களான ஆடிசன் சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இதுவரை ரியாஸ்கான், பூனம் பாஜ்வா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், எம் எஸ் பாஸ்கர், பாடகி சுதித்ரா முன்னாள் கணவர் கார்த்திக், பப்லு ப்ருத்விராஜ், பாடகி சுவேதா மேனன், பாடகி கல்பனா, அமலா ஷாஜி, சோனியா அகர்வால், நடிகை கிரண், ரோபோ ஷங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா ஆகியோர் பெயர்கள் தான் அதிகம் சோசியல் மீடியாவில் அடிபட்டு வருகிறது.
பிக் பாஸ் 8 குறித்த அப்டேட்:
இதில் யார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இன்னொரு பக்கம் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்து கமலஹாசனிடம் சேனல் தரப்பிலிருந்து பேசப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார்? என்ற கேள்விகள் சோசியல் மீடியாவில் எழுப்பி இருக்கிறார்கள். இருந்தாலுமே, கமலஹாசன் தான் இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார். இது உறுதியாகி விட்டது. அதுமட்டுமில்லாமல் புரோமோ சூட் குறித்த விவரம் தெரியவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து பிக்பாஸ் வீடு அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போதே புரோமோஷன் வேலைகளும் தொடங்கலாம். ஆகஸ்ட் மாதம் இறுதியில் நிகழ்ச்சி குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.