அந்த நடிகரால் தான் மதுவுக்கு அடிமையானேன் – பிக் பாஸ் டைட்டில் வின்னர் குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை.

0
212
tejas
- Advertisement -

பிரபல நடிகரால் தான் நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன் என்று பிக் பாஸ் நடிகை தேஜஸ்வி மடிவாடா அளித்திருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. ஹிந்தியில் பல வருடமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறார்கள். தமிழில் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ராஜு முதல் இடத்தையும், 2-ஆம் இடத்தை பிரியங்காவும் பிடித்து இருந்தார்கள். தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

தேஜஸ்வி குறித்த தகவல்:

அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. இவர் தெலுங்கு திரை உலகில் பட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கூட ரவீந்திரன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேஜஸ்வி :

பின் இவர் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் நன்றாக விளையாடி வந்தார். பின் 42 வது நாளில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். அதற்குப்பின் இவர் சில படங்களில் நடித்தார். தற்போது இவர் கமிட்மென்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை தேஜஸ்வி மடிவாடா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-

நடிகையின் மதுப்பழக்கத்திற்கு காரணம்:

அதில் அவர் தனக்கு ஏற்பட்ட மது பழக்கம் குறித்து கூறி இருந்தது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருந்தபோது என்னுடன் சக போட்டியாளராக இருந்தவர் நடிகர் கௌசல். இவர் என்னைப் பற்றி தவறாகவும், மோசமாகவும் சோசியல் மீடியாவில் தகவல்களை பரப்பி இருந்தார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். பிறகு தான் நான் குடிக்க ஆரம்பித்தேன். அப்படியே நான் மதுவுக்கு அடிமையும் ஆனேன். இதனால் என்னுடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது.

பாலியல் தொல்லை குறித்து சொன்னது:

சமீப காலமாக நான் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன். மேலும், சினிமா துறையில் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலுமே பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் எனக்கும் பாலியல் தொல்லைகள் இருந்தது. அதையெல்லாம் நான் எதிர்கொண்டு தான் படங்களில் நடித்தேன் என்று கூறி இருக்கிறார். இப்படி நடிகை தேஜஸ்வி அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement