பிக் பாஸில் இவருக்கு ஆதரவு கொடுங்கள் – ஒப்பானக பதிவிட்ட சித்ரா.

0
40201
biggboss4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் நடித்தாலும் இந்த தொடரில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.

மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.

- Advertisement -

ஆனால், இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் போட்டியாளர் ஒருவருக்கு உங்கள் ஆதரவை கொடுங்கள். உங்கள் 10 வாக்குகளையும் அளியுங்கள் என்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இன்னும் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்கவில்லை அதற்குள் சித்ரா யாருக்கு ஆதரவு அளிக்க சொல்கிறார் என்று ரசிகர்கள் பலரும் குழம்பி இருந்தனர்.

ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது பிக் பாஸ் தெலுங்கு போட்டியாளர் என்று. சரி அவருக்கு ஏன் சித்ரா ஆதரவு அளிக்க சொல்கிறார் என்று பார்த்தால், அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரராம். அவருடைய பெயர் மாஸ்டர் சூர்யா கிரண். இவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement