பிக் பாஸ் 3 வெற்றியாளருக்கு பப்பில் பீர் பாட்டிலால் தர்ம அடி. வெளியான CCTV வீடியோ.

0
4935
rahul
- Advertisement -

கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் தெலுங்கில் இரண்டு சீசன்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

-விளம்பரம்-
Rahul Sipligunj

- Advertisement -

தெலுங்கில் முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது. இதனால் இரண்டாவது சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர். ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர். ஆனால், முதல் சீசனில் என் டி ஆர் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டுசென்றது போல நானியால் கொண்டு செல்ல முடியவில்லை.

இறுதியில் மூன்றாவது சீசனை தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகர்ஜூனாவை வைத்து தொகுத்து வழங்கி இருந்தார். சீசனில் ராகுல் என்பவர் வெற்றியடைந்தார். இந்த நிலையில் பாஸ் தெலுங்கு சீசன் 3 வெற்றியாளர் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் அவரது நண்பர்கள் ஹைதராபாத்தின் கச்சிபோலி  நகரில் உள்ள ஒரு பப்பில் சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, யார் என்றே தெரியாத ஒரு குழு அவரது பெண் நண்பர்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் . அவர் எதிர்த்தபோது, ​​அது இரு குழுக்களுக்கிடையில் ஒரு பெரிய சண்டைக்கு வழிவகுத்தது.

-விளம்பரம்-

இது வாக்குவாதமாகி கடைசி அந்த சிலர் ராகுலை பீர் பாட்டிலால் சரமாறியாக தாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். பப்பில் நடைபெற்ற இந்த அசம்பாவித வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. மேலும் ராகுலை தாக்கிய அந்த கும்பலை போலிசார் கைது செய்துள்ளனர்., மேலும், தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ.வுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement