வி ஆர் தி பாத் ரூம் பாய்ஸ்.. தமிழ் போட்டியாளர்களை கலாய்த்த கன்னட போட்டியாளர்கள்.. வீடியோ இதோ..

0
9421
bigg-boss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை தமிழில் மூன்று சீசன்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி கன்னடத்தில் 7 சீசன்களை கடந்துள்ளது. அந்த வகையில் கன்னடத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இந்த மாதம் 13 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் கன்னட சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று கலந்து கொண்டு இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-
Image result for we are the boys

சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு எபிஸோடில் போட்டியாளர்கள் சிலர் we are the bath ரூம் பாய்ஸ் என்ற பாடலை பாடி கிண்டலடித்துள்ளனர். இந்த பாடலை கேட்டு மற்ற போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோவில் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் பங்குபெற்ற சாண்டி, கவின், லாஸ்லியா, தர்ஷன், முகென் ஆகியோரை தான் காலாய்த்துள்ளனர் என்று இந்த வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை இந்த 5 நபர்கள் தான் வி ஆர் தி பாய்ஸ் என்ற ஒரு குழுவை ஆரம்பித்தனர்.

இதையும் பாருங்க : கடற்கரையில் கசமுசா செய்த இளம் ஜோடிகள்.. ரசிகிசமாக வீடியோ எடுத்து வெளியிட்ட ஸ்ரீரெட்டி..

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது பாய்ஸ் குரூப்பு தாங்க. ஏன்னா, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது “வி ஆர் தி பாய்சு ஊ ஊ ஊ “என்ற பாடல் மூலம் பிரபலமானவர்கள் தான் இந்த பாய்ஸ் அணி. இந்த பாடல் வெறித்தனமாக தெரிக்கவிட்டது கூட சொல்லலாம். அதிலும் தற்போது விஜய் டிவி பாய்ஸ் அணியை மட்டும் வர வைத்து கொண்டாடி வருகிறார்கள். எப்போதுமே விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைத்து போட்டியாளர்களையும் வர வைத்து தான் ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் என ரகளையாக இருக்கும். ஆனால்,விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து “வி ஆர் தி பாய்சு ” அணியை மட்டும் வரவழைத்தது. இதில் சாண்டி, தர்ஷன்,முகென்,கவின் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இது ரொம்ப விஷமத்தன்மையான விஷயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும்,”வி ஆர் தி பாய்சு ஊ ஊ” என்ற பாடல் மூலம் தான் இந்த அணியை உருவாக்கினார்கள். இந்த அணி எப்படி உருவாச்சுன்னு ? பார்த்தோம்னா… பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ஒரு முறை நடிகை மதுமிதா அவர்கள் ஒரு சண்டையில் ஆண்கள் எல்லாம் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது ரொம்ப மோசமான விஷயமாக இருக்கிறது. பெண்கள் எல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்று ரொம்ப தாறுமாறாக பேசினாங்க. இதனால் மனமுடைந்து போய் சாண்டி, கவின் எழுதியது தான் “வி ஆர் தி பாய்சு ஊ ஊ ஊ “என்ற பாடல்.மேலும்,ஆண் என்ன? பெண் என்ன? எல்லாம் ஓரினம் தான் என்று சொல்லிட்டு ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள். இப்போ உலகம் முழுவதும் இந்த பாடல் பிரபலமாகபட்டது. ஆரம்பத்தில் நகைச்சுவையாக எழுதிய பாடல் இப்ப மாஸ் காட்டுது.

-விளம்பரம்-

வி ஆர் தி பாய்ஸ் குழுவிற்கு பல ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால், வி ஆர் தி பாய்ஸ் குழுவை வெறுக்கும் சிலர் இந்த குழுவை கக்கூஸ் கேங் என்று கிண்டலடித்து வருகின்றனர். அவ்வளவு ஏன், கமல் கூட வி ஆர் தி பாய்ஸ் குழு அடிக்கடி பாத்ரூம் அருகில் தான் அமர்ந்து பேசுகிறார்கள் என்று கிண்டலடித்திருந்தார். இந்த நிலையில் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் வி ஆர் தி பாய்ஸ் குழுவை கலாய்த்துள்ளது வி ஆர் தி பாய்ஸ் குழவின் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையில் இந்த வீடியோவில் அவர்கள் கவின் மற்றும் சாண்டி குழுவை தான் கலாய்த்துள்ளார்களா இல்லை வேறு ஏதாவது ஜாலிக்காக மட்டும் தான் இதை செய்தார்களா என்பது தெரியவில்லை

Advertisement