அறிமுகம் செய்து வைத்த விவேக், ஆட்டோ ஓட்டி தன்னை காப்பாற்றிய அஜித் – தாடி பாலாஜி நெகிழ்ச்சி.

0
503
ajith
- Advertisement -

தீனா படத்தின் போது நடைபெற்ற சுவாரசியமான சம்பவம் ஒன்றை தாடி பாலாஜி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் மட்டும் தான். ஆனால், அஜித்துக்கு அந்த பட்டம் வர காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தீனா ‘ படம் தான் காரணம். முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தது நடிகர் மகாநதி ஷங்கர் தான்.அவர் தான் அந்த படத்தில் வரும் முதல் பாடலில் அஜித்தை தல என்று அழைத்திருப்பார்.

-விளம்பரம்-

மேலும், தீனா படத்தில் இடம்பெற்ற ‘வத்திக்குச்சி பாதிக்காது டா’ என்ற பாடலின் ஆரம்பத்தில் மகாநதி ஷங்கர் தான் ‘தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது ‘ என்று கூறுவார். இந்த படத்திற்கு பின்னர் தான் அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ‘தல ‘ அஜித்தாக மாறினார். இந்த படம் மூலம் தான் முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார்.தீனா படத்திற்கு முன்பு வரை சாக்லேட் பாயாக இருந்த அஜித்துக்கு ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது தீனா படம் தான்.

- Advertisement -

விஜய் டிவியும் அஜித் படங்களும் :

இந்த படத்தில் இடம்பெற்ற பல ஆக்ஷன் காட்சிகள் செம மாஸாக அமைந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் தனக்காக அஜித் செய்த உதவி குறித்து கூறி இருக்கிறார் தாடி பாலாஜி. தொலைக்காட்சியில் விஜயின் நண்பன், துப்பாக்கி போன்ற பல படங்களை ஓயாமல் போட்டு வருகின்றனர். விஜய் படம் மட்டுமல்ல ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, தனுஷ் என்று அணைத்து டாப் நடிகர்களின் பல்வேறு நடிகர்களின் உரிமையை பெற்று அதனை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றனர்.

அஜித்தை புறக்கணிக்கும் விஜய் டிவி :

ஆனால், இதுவரை ஒரு அஜித் படத்தை கூட விஜய் டிவி ஒரு முறை கூட ஒளிபரப்பியது இல்லை. அவ்வளவு ஏன் விஜய் டிவி நடித்தும் விருது விழாவில் கூட பெரும்பாலும் அஜித்தை விஜய்க்கு தான் அதிக முறை விருதுகளை கொடுத்துவிடுகிறது. சரி, அஜித் வேண்டுமானால் விருதுகளில் பங்கேற்காமல் இருப்பதால் அவருக்கு விருது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அஜித் படத்தை விஜய் டிவி புறக்கணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

-விளம்பரம்-

விஜய் டிவியில் அஜித் நிகழ்ச்சி :

அவ்வளவு ஏன் நேர்கொண்ட பார்வை படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான அமிதாப் பச்சனின் ‘பிங்க் ‘ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கூட ஹாட் ஸ்டார் பெற்றுள்ளது என்பது குறிபிடத்தக்கது. ஆனால், நேர்கொண்ட பார்வை படத்தின் உரிமையை ஜீ தொலைக்காட்சி வாங்கியது என்பது குரிப்பிடத்தக்கது. ஆனால், அடிக்கடி தல தளபதி ஸ்பெஷல் என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வைத்துவிடுவார்கள்.

ஆட்டோ ஓட்டிய அஜித் :

அந்த வகையில் வரும் மே 1ஆம் தேதி அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் விஜய் டிவி ‘Akயின் மே டே’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றில் தாடி பாலாஜி பேசுகையில், அஜித்தின் வாலி படத்தில் விவேக் தான் தன்னை அறிமுகம் செய்து வைத்தார் என்றும் தீனா படத்தின் போது ஒரு காட்சியில் தனக்கு ஆட்டோ ஓட்ட தெரியாத காரணத்தால் அஜித்தே ஆட்டோ ஓட்டி தன் வாய்ப்பை காப்பாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement