காலம் கனிந்தது கதவுகள் திறந்தது – மகேஷை தொடர்ந்து புதிய சொகுசு காரை வாங்கிய தாடி பாலாஜி.

0
4360
balaji
- Advertisement -

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கார்களை வாங்கி வந்த வண்ணம் இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி புகழ், சரத் ஆகியோர் புதியகாரை வாங்கி இருந்தனர். அதே போல கலக்க போவது யாரு ஈரோடு மகேஷ், டிவி ஜாக்லின் என்று பலர் சமீபத்தில் புதிய காரை வாங்கி இருந்தனர். அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான தாடி பாலாஜியும் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் தாடி பாலாஜி. இவர் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வந்தாலும் இவருக்கும் பெரும் பிரபலத்தையும் வசதியையும் ஏற்படுத்து கொடுத்தது விஜய் டிவி தான் என்பது பலரும் அறிந்த ஒன்று. பல ஆண்டுகள் சினிமா மற்றும் தொலைக்காட்சியில் இருந்து வந்தாலும், பாலாஜியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இதையும் பாருங்க : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது – மகேஷை தொடர்ந்து புதிய சொகுசு காரை வாங்கிய தாடி பாலாஜி.

- Advertisement -

அதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு நல்ல நிலையில் இருக்கு பாலாஜி சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட பலரும் பாலாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-103-832x1024.jpg

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பாலாஜியுடன் பல நிகழ்சகளில் சக தொகுப்பாளராகவும் நடுவராகவும் இருந்த ஈரோடு மகேஷ் பென்ஸ் காரை வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கத்து. இப்படி தொடர்ச்சியாக விஜய் டிவி பிரபலங்கள் கார்களை வாங்கி வருவதை பார்த்து விஜய் டிவியில் இருந்து எல்லாருகும் சம்பளம் கொடுத்துட்டாங்களா என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement