எல்லாம் ரியாலிட்டினா பர்ஸ்ட் நைட்டையும் காமிக்க வேண்டியது தான – வெளுத்து வாங்கிய டாப் 10 சுரேஷ்.

0
3266
vetrimaran
- Advertisement -

நாளுக்கு நாள் தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது போல தமிழ் சினிமாக்களை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக படங்களை விமர்சனம் செய்து வருபவர் சுரேஷ் குமார். இவர் சன் டிவியில் டாப் 10 நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், சினிமா விமர்சகராகவும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் வடசென்னை படத்தை பற்றியும் , சினிமா குறித்தும், சினிமாவில் காண்பிக்கப்படும் ஒரு சில காட்சிக ள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Dhanush and Vetrimaaran wrap up shoot for part one of Vada Chennai -  Hindustan Times

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வட சென்னை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. ஆனால், அந்த படத்தில் காண்பிக்கப் பட்ட ஒரு சில காட்சிகள் தேவையற்றது என்று சுரேஷ் பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது, வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வசனங்கள் தேவையற்றது. இப்படியெல்லாம் காண்பித்தால் தான் சினிமா நன்றாக இருக்குமா? மோசமான வசனங்கள் பேசியதால் பெண்கள் உட்பட பல பேர் இதைப் பார்த்து முகம் சுழிப்பு மட்டுமே எஞ்சுகிறது. இது போன்ற தீய வார்த்தைகளை தான் சினிமாவில் காட்ட வேண்டுமா? அது மட்டுமில்லாமல் பல படங்களில் பல காட்சிகளில் புகை பிடித்தல், மது அருந்துதல் காட்சிகள் காண்பிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மகனுக்கு நடந்த திருணம் – இதோ புகைப்படம்.

- Advertisement -

எப்போதுமே எனக்கு இது பிடிக்கவே பிடிக்காது. இந்த மாதிரியான காட்சிகளை காண்பித்து விட்டு கீழே உடல் நலத்தில் தீங்கானது என்று குறிப்பிடுவதில் என்ன ஒரு பலன். ஏ சான்றிதழ் கொண்டு வெளிவரும் படங்கள் எத்தனையோ தியேட்டர்களில் உரிமையாளர்கள் 18+ க்கு மேல் மட்டும் டிக்கெட் தருகிறார்கள். அங்கு 18+ மட்டும் வருவர்களா? மேலும், இது என்னுடைய கருத்தாக மட்டும் சொல்லவில்லை. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களை தான் நான் இங்கே பதிவிடுகிறேன். அதனால் தான் நான் நடுநிலை விமர்சனங்களை எடுத்து வைக்கிறேன்.

நான் ஒரு படம் எடுத்தால் அதில் எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும் புகைபிடிக்கும்,மது அருந்துதல் காட்சிகளை நிச்சயமாக வைக்க மாட்டேன். முடிந்தவரை இயக்குனர்கள் சமூகத்தை சீரழிக்கும் சில காட்சிகளை படத்தில் வைக்காமல் இருந்தால் நல்லது. இந்த சமூகத்தில் சொல்வதற்கு என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அவற்றை காண்பித்தால் மக்களின் வாழ்விற்கு பல பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இங்கு இருக்கும் பல நட்சத்திரங்களை பார்த்து ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இந்த மாதிரியான தீய செயல்களால் ரசிகர்கள் இடத்திலும் மாற்றம் வருகிறது. புகையற்ற,மதுவற்ற படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இயக்குனர்கள் தான் பாடுபட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார் சுரேஷ்.

-விளம்பரம்-
Advertisement