இப்படியா, ஜெயிக்கனும் இதெல்லாம் பிணத்துக்கு தான் பண்ணுவாங்க – டிவியில் காட்டப்படாத சண்டை. வைரலாகும் வீடியோ இதோ.

0
525
niroop
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் நாளை மறுநாள் நிறைவடைய இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 15 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் இறுதி போட்டியில் பிரியங்கா, நிரூப், ராஜு, பாவனி, அமீர் ஆகிய 5 பேர் இருக்கின்றனர். கடந்த வாரம் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, அமீர், நிரூப் என்று 7 பேர் உள்ளே இருந்தனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர கடந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் 12 லட்ச ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் சிபி. சிபி வெளியேறியதால் இந்த வார நாமினேஷனில் பிரியங்கா, ராஜு, தாமரை, நிரூப், பாவனி ஆகிய 5 பேர் மட்டும் தொடர்ந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டியாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பொறியாளரை நேரடியாக இறுதி வாரத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்று கூறப்பட்டது.

- Advertisement -

பிக் பாஸ் கொடுத்த கேவலமான டாஸ்க் :

இதில் பிக் பாஸ் வீட்டில் காட்டிய முகத்தை இதுவரை மக்களுக்கு ஒரு முகத்தை காட்டாமல் வெற்றிகரமாக மறைத்து வைத்து இருந்த நபரை தேர்ந்து எடுத்து அவர் தலையில் தண்ணீரை ஊற்றி ரோஜா பூ தூவி அவரை கலங்கமற்றவராக பிக் பாஸின் இறுதி போட்டிக்கு நேரடியாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்க்கை முடிக்க பல மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஒற்றை காலில் நின்ற நிரூப் :

பின் பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் இதில் ஆரம்பத்தில் பாவனியை அனைவரும் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு போட்டியாளர்கள் சொன்ன காரணம் ஏற்க முடியவில்லை என்று பிக் பாஸ் அதனை மறுத்துவிட்டார். பின்னர் பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் நிரூப்பை பைனலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், தாமரையை தவிர மற்ற யாரும் நிரூப்பை மனதார பைனலுக்கு அனுப்பி வைக்கவில்லை. இதன் மூலம் நிரூப் இறுதி போட்டிக்கு செல்லும் இரண்டாம் போட்டியாளரானார்.

-விளம்பரம்-

இறுதி போட்டிக்கு செல்ல அவமானங்களை ஏற்ற நிரூப் :

அதே போல நிரூப், தான் இறுதி போட்டிக்கு செல்ல எந்த அளவிற்கும் தாழ்ந்து போக வேண்டுமா என்று பலரின் கேள்வியாக இருந்தது. இதையே தான் மற்ற போட்டியாளர்களும் சொன்னார்கள். இறுதி போட்டிக்கு செல்ல நிரூப் இப்படி விளையாட வேண்டுமா என்று பலரும் கூறி வந்த நிலையில் நிரூப் மீது தண்ணீரை ஊற்றிய பின்னர் தாமரை அவரிடம் இது பிணத்துக்கு செய்யும் சடங்கு என்று கூறியதாக தாமரை பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

நிரூப் பற்றி தாமரை :

இதுகுறித்து பேசிய தாமரை, அவன் என்கிட்டே வந்து கேட்டான் ‘அக்கா இது எதுக்கோ செய்வார்களேன்னு’ அதுக்கு நான் சொன்னேன் ‘ஆமா டா இதெல்லாம் பிணத்துக்கு தாண்டா பண்ணுவாங்க என்று சொன்னேன். எங்க ஊரில் செத்தவங்களுக்கு பன்னீர் கலந்த தண்ணியில குளிப்பாட்டி ரோஜா பூ போட்டு தான் கொண்டுட்டு போவாங்க, அதை சொன்னதுக்கு அப்புறமும் சிரிக்கிறான், ஆனால், அவன் அப்படி பண்ணது எனக்கு பிடிக்கல அத அவன்கிட்டயே சொல்லிட்டேன் என்று தாமரை சொன்னாராம்.

Advertisement