பிக் பாஸ் பைனலில் தாமரையை அசிங்கப்படுத்தியுள்ள பிரியங்கா – அனிதாவிடம் புலம்பி பிகாவின் முகத்திரையை கிழித்த தாமரை.

0
549
- Advertisement -

சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார். அதிலும் தெரிந்த முகத்தை விட தெரியாத முகங்கள் தான் அதிகமாக இருந்தார்கள். முகம் தெரியாத நபராக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை. இவர் நாடகக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

-விளம்பரம்-
Bigg Boss Priyanka Predicted Thamarai Selvi Real Face Before

ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தாமரை பலருடன் நல்ல உறவில் இருந்தாலும் ப்ரியங்காவுடன் அதிகமான நெருக்கத்தில் இருந்தார். ஒரு உடன் பிறந்த அக்கா, தங்கை போல் இருவரும் இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் வீட்டில் பிரியங்காவும், தாமரைச்செல்வியும் நெருக்கமாக இருந்தாலும் சில நேரங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பின் இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதிலும் டாஸ்க் சமயத்தில் நிரியங்காவும், தாமரையும் குழாய் அடி சண்டை போல் அடித்துக் கொண்டாலும் மற்ற நேரங்களில் இருவரும் பாசத்தை பொழிந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா-தாமரை:

இப்படி எவ்வளவு சண்டை போட்டாலும் பிரியங்கா சாப்பாடு வேண்டும் என்று கேட்டவுடன் தாமரை பலமுறை செய்து செய்து கொடுத்திருக்கிறார். அந்த அளவிற்கு இருவரும் உடன்பிறந்தவர்கள் போல் இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார். அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி ஒரு புது வித பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, பாலாஜி செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை முன்பை விட மிக திறமையாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிரியங்கா குறித்த சில விஷயங்களை அனிதாவிடம் கூறி இருக்கிறார் தாமரை. அந்த எபிசோட் பற்றி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன தாமரை சொல்லி இருக்கிறார் என்றால், பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா என்னுடன் அவ்வளவு நெருக்கமாக பழகினார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை பேசியது:

சொல்லப்போனால் அவர் என்னிடம் உன்னுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி விடுவேன். உன் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது என்று கூறினார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட பிரியங்கா பண்ணவில்லை. பிரியங்கா ஒரு மிகப்பெரிய பிரபலம் என்பதால் தான் நான் அவருடைய நம்பரை வாங்கவில்லை. ஆனால், பிரியங்கா நினைத்திருந்தால் என்னுடைய நம்பரை எளிதாக வாங்கி போன் பண்ணி இருக்கலாம். ஆனால், அவர் இன்னும் என்னிடம் பேசவில்லை.

பிரியங்கா பற்றி தாமரை சொன்னது:

அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தான் அடிக்கடி என்னை கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்தது எல்லாம், ஆனால், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் பிரியங்கா அப்படியே வேற மாதிரி. நான் பைனலுக்கு வந்த போது எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அப்போது என்னை பிரியங்கா பார்த்ததும் கட்டிபிடிக்காமல் கொஞ்சம் தள்ளி நின்று தான் பேசினார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று அனிதாவிடம் சொல்லி புலம்பி தள்ளி இருந்தார் தாமரை. இப்படி தாமரை அனிதாவிடம் பேசி இருக்கும்கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் தாமரைக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement