ராஜுவ என் மூத்த பையன் மாதிரி நெனச்சேன், ஆனா வெளிய போய் தான தெரியுது – புலம்பிய தாமரை, ஒத்து ஊதிய ஜூலி.

0
651
thamarai
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார். அதிலும் முகம் தெரியாத நபராக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை. இவர் நாடகக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று.

-விளம்பரம்-

மேலும், பிக் வந்தது வீட்டில் இருந்த போது தாமரை பலருடன் நல்ல உறவில் இருந்தார். தாமரை எல்லோர் உடனும் அக்கா, தங்கை,தம்பி,மகன் போல் இருந்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார். தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இரண்டு வாரத்தை கடந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, பாலாஜி செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை:

முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சி சூடு பிடித்து இருக்கிறது. ஒவ்வொரும் அருமையாக விளையாடி வருகிறார்கள். அதிலும் தாமரை இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் முன்பை விட மிக திறமையாக விளையாடி வருகிறார் என்று சொல்லலாம். மேலும் இந்த வீட்டில் ஜூலி, அனிதாவிடம் தான் தாமரை அதிக நேரம் இருக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவருடன் இருக்கும்போது பிக் பாஸ் சீசன் 5ல் இருந்த போட்டியாளர்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் தாமரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ராஜு குறித்து பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

நிகழ்ச்சியில் ராஜு பற்றி தாமரை சொன்னது:

அதில் அவர் கூறியது, நான் பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் போது ராஜீ என் மீது ரொம்ப பாசமாக இருந்தான். நானும் என்னுடைய முதல் பிள்ளை போல் நினைத்து பாசமாக இருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லாமே மாறிப்போச்சு. இன்னும் வரை ராஜு என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஜக்கி, இமான் அண்ணாச்சி தவிர யாருமே என்கிட்ட பேசல. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அவ்வளவு பாசமா இருந்து வெளியே வந்தவுடனே ஏன்டா இப்படி எல்லாம் நடக்குது என்று நான் தூங்காமல் நிறைய நாள் இருந்திருக்கிறேன். இதனால் என் வீட்டுக்காரர் என்னவோ எனக்கு ஆயிடுச்சு என்று பயந்துட்டாரு. அந்த அளவுக்கு நான் ஒருத்தர் மேல பாசம் வச்சா எடுக்கவே மாட்டேன்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் பிரியங்கா பற்றி தாமரை சொன்னது:

கொஞ்ச நாள் ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு அது புரிஞ்சுக்கவே ரொம்ப நாளாச்சு என்று கூறியிருக்கிறார். அதே போல் கடந்த வாரம் தாமரை, பிரியங்காவை குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர், பிரியங்கா என்னிடம் உன்னுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி விடுவேன். உன் வாழ்க்கை எப்படி மாறப்போகிறது பார் என்று கூறினார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட பிரியங்கா பண்ணவில்லை. பிரியங்கா ஒரு மிகப்பெரிய பிரபலம் என்பதால் தான் நான் அவருடைய நம்பரை வாங்கவில்லை. ஆனால், பிரியங்கா நினைத்திருந்தால் என்னுடைய நம்பரை எளிதாக வாங்கி போன் பண்ணி இருக்கலாம். ஆனால், அவர் இன்னும் என்னிடம் பேசவில்லை.

நிகழ்ச்சியில் வருண் பற்றி தாமரை சொன்னது:

அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தான் அடிக்கடி என்னை கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்தது எல்லாம். பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே பிரியங்கா அப்படியே வேற மாதிரி. நான் பைனலுக்கு வந்த போது எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அப்போது என்னை பிரியங்கா பார்த்ததும் கட்டிபிடிக்காமல் கொஞ்சம் தள்ளி நின்று தான் பேசினார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், வருண் என்னிடம் நன்றாக பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு வருண் டபுள் டோர் கதவு வைத்த கருப்பு கலர் பிரிட்ஜ், ஓவன் எல்லாம் வாங்கி தந்தான். பிக் பாஸ்ஸில் இருக்கும் போது இதெல்லாம் நான் எடுத்துக்கொண்டு போவேன் என்று சொன்னதை கேட்டு வருண் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு வாங்கித் தந்திருக்கிறான். ரொம்ப நல்ல பையன் என்று கூறி இருக்கிறார்.இப்படி தாமரை பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement