பிக் பாஸில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு – இந்த முறை இவர் வெல்ல நிறைய சான்ஸ் இருக்கு.

0
669
thamarai
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் பட்டத்தை தட்டி செல்பவர் யார் என்று தெரிந்து விடும். தற்போது இறுதி கட்டத்திற்கு பிரியங்கா, அமீர், ராஜ், நிரூப், பாவனி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-44.png

இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே பாஸில் வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்து டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், வீட்டில் 12 லட்ச ரூபாய் பணம் வைக்கப்பட்டபோது தாமரை எடுத்து வெளியே போய்விடுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், தாமரை பணத்தை எடுக்காமல் கடைசி வரை போராடுவோன் என்று விளையாடினார். தான் எப்படியாவது இறுதி போட்டிக்கு நுழைந்து விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தான் இருந்தார் தாமரை.

- Advertisement -

எதிர்பாராத தாமரையின் வெளியேற்றம் :

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் தாமரை பிக் பாஸில் இருந்து வெளியேறினார். தாமரை வெளியேறியது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கமலுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. நீங்கள் வெளியேறுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை, மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று புரியவில்லை என்று கமலே கூறி இருந்தார். சொல்லப்போனால் கடந்த வாரம் நிரூப் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார். எனவே, தான் தாமரை வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

thamarai

மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி :

சொல்லப்போனால் கடந்த வாரம் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிரூப்பை விட தாமரை அதிகமான வாக்குகளை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தாமரை பணப் பெட்டியுடன் வெளியேறி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்பது ரசிகர்கள் பலரின் ஆதங்கம். பொதுவாக பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விஜய் டிவி தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் அதிலும் பெண் போட்டியாளர்கள் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை.

-விளம்பரம்-

தாமரை கை வந்த கலை :

அந்த வகையில் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தாமரை கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாமரைக்கு நடனமும் பாடலும் கை வந்த கலை, அதே போல தாமரைக்கு சமையலும் கைவந்த கலை தான் என்பது பலரும் அறிந்த உண்மை. அதற்கு முக்கிய காரணம், பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை போட்டியாளர்கள் அனைவரும் தாமரையின் சமையலை தான் ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருந்தனர். அதே போல தாமரை முதல் நாளில் கலந்துகொள்ளப் போவது இல்லையாம்.

cooku

குக்கு வித் கோமாளி 3 :

நிகழ்ச்சி துவங்கி சில வாரங்கள் கழித்து வைல்டு கார்டு போட்டியாளராக தாமரை கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. கடந்த சீசனில் ரித்விகா வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதில், பின்னணி பாடகர் அந்தோணி தாஸ், கிரேஸ் கருணாஸ், வித்யு லேகா, சார்பட்டா பட நடிகர் சந்தோஷ் பிரதாப், மனோ பாலா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement