பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகி இருக்கும் ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. வருடம் வ்ருடம் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார்.
தற்போது கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். இதை அடுத்து யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின் இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார் என்று சேனல் தரப்பில் இருந்து ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது. இதனால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாகவும், விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் 8 ஆரம்பம்:
அதனை தொடர்ந்து சமீபத்தில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கும் தேதி குறித்த புது பிரமோ வெளியாகி இருந்தது. அதில், வருகிற அக்டோபர் முதல் வாரம் அதாவது 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக சேனல் தரப்பிலிருந்து அறிவித்து இருக்கிறார்கள். மேலும், பிக் பாஸ் 8 நிகழிச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் முடிந்ததாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் 8 போட்டியாளர்கள்:
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து இறுதி பட்டியல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெளியான தகவலின்படி பிக் பாஸ் 8 போட்டியாளர்களின் லிஸ்ட் இதுதான்.
அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்)
ஷாலின் ஜோயா ( குக் வித் கோமாளி பிரபலம்)
ரஞ்சித் (பிரபல நடிகர்)
சுனிதா (விஜய் டிவி பிரபலம்)
ரவீந்தர் சந்திரசேகர் (சினிமா தயாரிப்பாளர்)
ஐஸ்வர்யா (நடிகை)
சௌந்தர்யா நஞ்சுண்டன் (மாடல்)
பால் டப்பா(பாடலாசிரியர்)
தீபக் (நடிகர்)
கோகுல்நாத் (நடிகர்)
வி.ஜே விஷால்(நடிகர்)
சந்தோஷ் பிரதாப்(நடிகர்)
ஜாக்லின்(தொகுப்பாளினி)
பவித்ரா ஜனனி (விஜய் டிவி பிரபலம்)
சஞ்சனா(நடிகை)
அன்சிதா
தர்ஷா குப்தா
அர்னவ்
பிக் பாஸ் 8 ப்ரோமோ வீடியோ:
மேலும், இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக இதற்கு முந்தைய சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் பார்வையாளர்கள் ஒரு பக்கம், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு பக்கம் என்று இரு அணிகளாக பிரித்து விவாதம் செய்கிறார்கள். அப்போது ஒருவர், யார் ஆக்டிவாக எதிர்த்து நின்று சண்டை போடுறாங்களோ அவர்களை மட்டும் எலிமினேட் செய்கிறார்கள் ஏன்? என்று கேட்டதற்கு தாமரை, நம்மள அடிச்சி தரையில உட்கார வச்சா வெளியே தெரியவே மாட்டோம்.
தாமரை சொன்னது:
எனக்கும் பிரியங்காவுக்கும் நிறைய சண்டை நடந்திருக்கு. வெளியில் வந்த பிறகு பிரியங்கா எனக்கு நிறைய வாழ்த்து சொல்லி இருக்காங்க. நான் இந்த இடத்திற்கு வந்ததை நினைத்து சந்தோஷப்படுவதாக இன்னமும் மெசேஜ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். உடனே தொகுப்பாளர் குரேஷி, அதற்கு ஒரு வீடியோவை போட்டு விடுங்க அக்கா என்று கிண்டலாக பேசுகிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இந்த ப்ரோமோ வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.