பிக் பாஸில் பட்டை, இப்போ பேண்டு சட்டை – படு ஸ்டைலிஷ் லுக்கில் ஆளே மாறியுள்ள தாமரை

0
754
- Advertisement -

பிக்பாஸ் தாமரையின் புது கெட்டப் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் 105 நாட்கள் ஓடி ஒளிபரப்பாகி இருந்தது.

-விளம்பரம்-
Bigg Boss Thamarai Selvi Home | தாமரை செல்வியின் வீடு

இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த 5வது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமயமில்லாத பலர் பங்கேற்று இருந்தனர். அதில் ஒருவர் தான் தாமரை செல்வி. இவர் மேடை நாடக கலைஞர். மேடை நாடகங்களில் நடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை பார்த்து வந்தவர் தாமரை. கணவர், குழந்தையை தாண்டி அம்மா, சகோதரியையும் அவர் தான் பார்த்துக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரை:

மேலும், தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலம் கிடைத்து இருக்கிறது. இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்து இருந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. அதே போல அந்த சீசனில் இறுதி வாரம் வரை தாமரை செல்வி வந்து இருந்தார். அந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார் தாமரை என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தாமரைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதற்கு பின் தாமரை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பாகி இருந்தது. இதே பிக்பாஸ் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி இருந்தார்கள்.

-விளம்பரம்-

அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை:

இதில் பாலாஜி, ஜூலி, ரம்யா பாண்டியன், நிரூப், தாமரை ஆகிய 5 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். பின் ஜூலி வெளியேறி பாலாஜி, நிரூப், தாமரை, ரம்யா ஆகிய 4 பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பட்டத்தை வென்றுஇருந்தார். மேலும்
இரண்டாம் இடத்தை நிரூப்பும் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை ரம்யா மற்றும் தாமரையும் பிடித்து இருந்தார்கள். தற்போது தாமரை விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

தாமரையின் புது கெட்டப் வீடியோ:

இதில் இவர் தன் கணவருடன் சேர்ந்து நடனம் ஆடி வருகிறார். இந்த நிலையில் தாமரையின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், எப்போதுமே புடவையில் தோன்றும் தாமரை முதன்முறையாக பேண்ட் சர்ட் அணிந்து வேற மாறி இருக்கிறார். மேலும், தாமரை, ஐக்கி பெர்ரி உடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம தாமரைச் செல்வி அக்கா இது! என்று பாராட்டி கமெண்ட்டுகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement