விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள். இதில் முகம் தெரியாத நபராக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை. இவர் நாடகக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தாமரை பலருடன் நல்ல உறவில் தான் இருந்தார்.
இவர் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வெல்வார் என்று கூறியிருந்தார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாமரைச்செல்வி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். குறிப்பாக இவருக்கும் பிரியங்காவுக்குமான சண்டைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்றியது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் மற்ற போட்டியாளர்களின் உறவினர்கள் கூட தாமரையின் ரசிகர்கள் ஆனார்கள். இப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த தாமரை பைனலுக்கு முன்பு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை தன்னுடைய கலை பயணத்திற்கு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்தது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, பாலாஜி செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.
பிரியங்கா குறித்து தாமரை சொன்னது:
முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சி சூடு பிடித்து இருக்கிறது. தாமரை இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் முன்பை விட திறமையாக விளையாடி வருகிறார் என்று சொல்லலாம். இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை அதிகமாக பாலாஜி, ஜூலி, அனிதா, அபிராமி இவர்களுடன் தன் நேரத்தை செலவழித்து வருகிறார். அவர்களுடன் பொழுதை கழிப்பது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்படிதான் அனிதாவிடம் தாமரை நிகழ்ச்சியின்போது பிரியங்கா நடந்து கொண்டதையும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா நடந்து கொண்டதையும் ஷேர் செய்தார்.
ராஜு குறித்து தாமரை சொன்னது:
பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு வருண் டபுள் டோர் கதவு வைத்த கருப்பு கலர் பிரிட்ஜ், ஓவன் எல்லாம் வாங்கி தந்தான். வருண் ரொம்ப நல்ல பையன் என்று கூறி இருக்கிறார். அதேபோல் தாமரை, ராஜு குறித்து கூறியது, ராஜீ என் மீது ரொம்ப பாசமாக இருந்தான். நானும் என்னுடைய முதல் பிள்ளை போல் நினைத்து பாசமாக இருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லாமே மாறிப்போச்சு. இன்னும் வரை ராஜு என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஜக்கி, இமான் அண்ணாச்சி தவிர யாருமே என்கிட்ட பேசல. எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு என்று எல்லாம் தாமரை அழுது புலம்பி சொன்னார். இந்நிலையில் ஸ்ருதியுடன் தாமரை பேசும்போது ராஜு குறித்து மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.
தாமரையை விமர்சிக்கும் ரசிகர்கள்:
ராஜு மூலம் தான் சிவகார்த்திகேயன் தாமரையிடம் பேசியதாகவும், போனில் பேசிய சிவா அவரின் அம்மா தாமரை ஃபேன் என்று கூறியதாகவும் தாமரை சந்தோஷம் கலந்த பிரமிப்புடன் பகிர்ந்து இருந்தார். இப்படி தற்போது பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதே தாமரை சில தினங்களுக்கு முன்பு ஜூலி மற்றும் பாலாஜியிடம் மனம் விட்டுப் பேசும் போது ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆளே மாறிவிட்டார். போன் செய்து கூட பேசவில்லை. அவரை நான் என்னுடைய மூத்த மகன் போல் நினைத்தேன் என்றெல்லாம் பேசி இருந்த தாமரை தான் ராஜு மூலம் சிவகார்த்திகேயன் போனில் பேசினார் என்று சொல்கிறார். இப்படி மாற்றி மாற்றி தாமரை பேசி இருப்பதால் ரசிகர்கள் தாமரைக்கு எதிராக எதிர்மறை விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.