‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. இவர்கள் இருவரும் சேர்ந்து பல மேடைகளில் நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிற்றர்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவர்கள் இருவருக்கும் பின்னர் சினிமாவில் பாடும் வாய்ப்புகளும் குவிந்தது. அதிலும் சமீபத்தில் ராஜலட்சுமி ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜலக்ஷ்மி, தாமரை செல்வி குறித்து பேசி இருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 83 நாட்களை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. முதல் நாளே 18 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே நதியா சங் வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி, ஐக்கி பெரி , அண்ணாச்சி, அபிநய் என்று அடுத்தடுத்து 10 பேர் வெளியேறினார்கள்.
டாப் 10ல் வந்த தாமரை :
இந்த சீசனில் தான் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர். இவர் மேடை நாடக கலைஞர். மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து வந்துள்ளார்.
வறுமையும் நாடக கலையும் :
தற்போது டாப் 10 போட்டியாளர்களின் ஒருவராக வந்து இருப்பது பாராட்டாக்கூடிய ஒன்று தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தனர். அந்த வகையில் இந்த டாஸ்கில் பேசிய தாமரை தன் குடும்பத்தினராலும் கணவராலும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கூறியிருந்தார்.
தாமரை குறித்து ராஜலக்ஷ்மி :
வறுமை காரணமாக சிறு வயதிலேயே தாமரை செல்வியை நாடகத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். தற்போதும் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார் தாமரை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, தாமரை செல்வி குறித்து பேசியுள்ளதாவது ‘தாமரைச்செல்வி அக்காவை ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகில் இருக்கும் ஒரு ஊரில் மேடை நிகழ்ச்சிக்காக நடனம் ஆட வந்த போது தான் பார்த்தேன்.
பிக் பாஸுக்கு பாராட்டு :
அதிலிருந்து தான் அவரை எனக்கு தெரியும் அப்போதிலிருந்தே அவர் எனக்கு நல்ல பழக்கம் அதன் பின்னர் அவரை பார்த்து பேசி இருக்கிறேன். ஆனால், பிக் பாஸில் அவரை பார்த்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஒரு முயற்சி ஒரு நல்ல விஷயம் தான். எங்கேயோ இருந்த ஒரு நாடக கலைஞருக்கு இப்படி ஒரு மேடையில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறீர்கள். இது நாளை அவரின் வாழ்க்கைக்கும் நாடகத்துக்கும் ஒரு மிகப்பெரிய பூஸ்டாக அமையும்’ என்று பதிவிட்டுள்ளார்.