விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் சின்ன மருமகள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் ஹீரோ சேது, ஹீரோயின் தமிழ்செல்வி இருவருமே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஹீரோயினிக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இருந்தாலுமே பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு தன் கணவரை புரிந்து கொண்டு தமிழ் அவருடன் சேர்ந்து வாழ்கிறார். பின் ஒரு கட்டத்தில் தமிழ்ச்செல்வி அறியாமல் செய்த தவறால் சேது அவர் மீது கோபப்படுகிறார். பின் தமிழ், கர்ப்பமாக இருப்பதாக நாடகம் ஆடியதால் சேது அவரை விட்டு பிரிந்து விவாகரத்து கேட்கிறார்.
சின்ன மருமகள் :
தற்போது தமிழ்செல்வி உண்மையில் கர்ப்பமாக இருக்கிறார். இருந்துமே சேது அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் கோர்ட்டில் சேது- தமிழ் விவாகரத்து நடக்கிறது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று அப்பத்தா போராடிக் கொண்டிருக்கிறார். இனி அடுத்து என்ன? என்ற பரபரப்பில் தான் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் சின்ன மருமகள் சீரியல் நடிகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தாமரை பதிவு:
அதாவது, இந்த சீரியலில் ஹீரோயினின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தாமரை. இவருடைய மாமியாராக வருபவர் தான் சலீமா. இவர் 70 மற்றும் 80 காலகட்டங்களில் வெளிவந்த பல படங்களில் டான்ஸர் ஆகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு திருமணம் நடக்கவே இல்லை. தற்போது இவர் சின்ன மருமகள் சீரியலில் மாமியார் வேட்டத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு Carcinoma என்ற புற்றுநோயியல் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

பிரபலம் உதவி:
இது வாய்,மூக்கு மற்றும் தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதற்காக தற்போது இவர் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இவருடைய சிகிச்சைக்கு 17 முதல் 20 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை இவரால் சிகிச்சைக்கு ரெடி பண்ண முடியவில்லை. இதனால் இவர் ரசிகர்களிடம் உதவி கேட்டு வருகிறார் என்று இவருடன் சீரியலில் நடிக்கும் பிக் பாஸ் தாமரை உதவி கேட்டு பதிவு போட்டு இருக்கிறார்.






