சனம் போட்ட வழக்கு, ஜாமீன் கேட்ட தர்ஷன் – நீதிமன்றம் அளித்த உத்தரவு.

0
898
tharshan-sanam-shetty
- Advertisement -

தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை அளித்துள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டியும் ஒருவர். ஆரம்பத்தில் இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்தார். சனம் ஷெட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-57.jpg

சனம் ஷெட்டி ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டது பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் மூலமா தான்.தர்ஷன், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், இவர்கள் இருவரும் காதலித்த விஷயத்தை கூட சனம் அப்போது சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை சனம் ஷெட்டி, தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.மேலும், நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சனம் ஷெட்டி, தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும்.ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார்.தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கம் தொடரப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார் அளித்திருந்தாலும் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார் சனம் ஷெட்டி. இப்படி ஒரு நிலையில் இந்த வழக்கு கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சனம்ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement