தர்ஷனின் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்.! உருக்கமான பதிவுகள்.!

0
9888
tharshan

பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறி இருப்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிக்பாஸ் அறிவித்த 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

கவின் வெளியேறியதால் லாஸ்லியா சாண்டி தர்ஷன் ஷெரின் ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்று இருந்தனர். இந்த வாரம் முழுவதும் மிகவும் பரபரப்பாக ஒட்டிங்கும் நடைபெற்று வந்தது. இதில் கண்டிப்பாக ஷெரின் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் தர்ஷன் வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதும் விஜய் டிவி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

தர்ஷன் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று சக போட்டியாளர்கள் புகழாரம் சூட்டி வந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்பாக தர்ஷன் எலிமினேட் ஆகியுள்ளது சக போட்டியாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அந்த வகையில் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு நடிகர் நடிகைகள் தர்ஷனுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

பிரபல நடிகர் சாந்தனு, நடிகர் சிவகுமார், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை, ஆர்த்தி, நடிகை சாக்க்ஷி அகர்வால், நடிகை யாஷிகா ஆனந்த், நடிகை ஐஸ்வர்யா தத்தா, நடிகை நீலிமா ராணி, கஸ்தூரி, சேரன் உள்ளிட்ட பல்வேறு நடிகர் நடிகைளும் தர்ஷனுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement