முகத்தில் காயங்களுடன் தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட வீடியோ. இதான் நடந்துச்சாம்.

0
9237
tharshan

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 3 வது சீசன் கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானபல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த சீசனில் ராசிகளுக்கு பரிட்சயமில்லாத சில போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தர்சனும் ஒருவர். அது போக கடந்த சில வரமாக தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி பஞ்சாயத்து தான் வைரலாக போய் கொண்டு இருக்கிறது.

https://www.facebook.com/watch/?v=956046021501148

தர்ஷனுக்கு சனம் ஷெட்டி என்ற காதலி இருக்கிறார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் சென்ற சில நாட்களிலேயே தெரியவந்தது. தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

. சனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது. ஆனால், தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவரின் பிரச்சனை என்ன ஆனது என்பது தெரியவில்லை. சனம் ஷெட்டியும் அந்த பிரச்சனை குறித்து பேசுவதை நிறுத்தி விட்டார்.

இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுஷாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவரது முகத்திலும் கண்களிலும் காயம் ஏற்பட்டு இருந்தது. இதற்கு விளக்கமளித்த சனம் ஷெட்டி, சமீபத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் தனக்கு இந்த காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement