என்னை வேண்டுமென்றே அழிக்கிறார்கள். சனம் ஷெட்டி விவகாரம் குறித்து முதன் முறையாக பதிவிட்ட தர்ஷன்.

0
12169
tharshan-sanam-shetty
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கை மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இந்தநிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரச்சனைதான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
tharshan-sanam

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி கூறுகையில் தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது.

- Advertisement -

இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க தர்ஷன் மீது சனம் ஷெட்டி பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பிரச்சனை துவங்கிய நாளில் இருந்தே தர்ஷன் தனது சமூக வலைதளத்தில் எந்த ஒரு பதிவையும் இதுகுறித்து போடாமல் இருந்தார். இந்த நிலையில் தர்ஷன் இன்று ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், எந்தவொரு காரணத்திற்காகவும் உறவுகள் தோல்வியடைகின்றன, அது அந்த இரண்டு நபர்களுக்கிடையில் உள்ளது. ஒன்று அல்லது இருவரும் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தால், விஷயங்கள் மிகவும் கடினமாகிவிடும் முன், இணக்கமாக தனித்தனி வழிகளில் செல்வதே யதார்த்தமான தேர்வு. எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு மகிழ்ச்சியற்ற உறவில் இருப்பது சரியல்ல, காயப்படுத்த எந்த நோக்கமும் இல்லை. இந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது, ஆனால் விஷயங்கள் ஆரோக்கியமற்றவையாகிவிட்டன, அவர்களால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என்னை வேண்டுமென்றே அழிக்கத் தொடங்கினர். குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை.

-விளம்பரம்-

எனது கேரக்டர் ஊடகங்கள் மற்றும் உண்மைகளை அறியாதவர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நான் மிகவும் வேதனை அடைகிறேன், இந்த காரணத்திற்காக சமூக ஊடகங்கள் போன்றவற்றிலிருந்து கொஞ்சம் விலகி நேரத்தை எடுத்துக்கொண்டேன். வாழ்க்கையில் பின்னடைவுகள் நிகழ்கின்றன, ஆனால் நான் இதிலிருந்து கற்றுக்கொண்டேன், இப்போது எதிர்காலத்திலும் எனது வாழ்க்கையிலும் கவனம் செலுத்தியுள்ளேன். எதுவாக இருந்தாலும் என்னுடன் நின்றவர்களுக்கு மிக்க நன்றி, அதற்காக நான் நித்தியமாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

Advertisement