தர்ஷன் மனுஷனே இல்லை. தர்சனம் காதல் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் மதுமிதா.

0
24555
tharshan-madhumitha

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும்,இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் நடிகை ஜாங்கிரி மதுமிதா விஷயம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும்,பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்து நடிகை மதுமிதாவுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் சின்னச் சின்ன தகரால்களும், பிரச்சனைகளும் வந்து கொண்டு தான் இருந்தன. இதனை தொடர்ந்து நடிகை மதுமிதாவுக்கு பைனல் செல்ல தகுதி உடையவர் என்று மக்கள் கூறுவதாக கமலஹாசன் அவர்கள் கூறியிருந்தார்.

Image result for tharshan sanam breakup"

அதுமட்டும் இல்லாமல் இப்படியே தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா அவர்கள் தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டார். ஆனால், இந்த நிகழ்வுகள் டிவியில் ஒளிபரப்பவில்லை. மேலும், இதனால் நடிகை மதுமிதாவை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். பின்னர் வெளியே வந்தவுடன் மதுமிதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்தார். அந்த பேட்டியில் கூறியது, வீட்டில் இருந்த கஸ்தூரி, சேரன் இவர்களை தவிர மீதி எட்டு பேரும் என்னை கொடுமை செய்தார்கள். மேலும், குரூப் ராகிங் செய்து என்னை தற்கொலை முயற்சிக்கு தூண்டி விட்டார்கள் என்று கோபமாக பேசினார். அதுமட்டும் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கவின் அவர்கள் திடீரென்று மதுமிதா வீட்டிற்கு சென்று அப்போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டார்.

- Advertisement -

இதை தொடர்ந்து மதுமிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது, கவின் உட்பட யாரும் தன்னை நேரில் வந்தோ,போனில் தொடர்பு கொண்டோ பேச வில்லை. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியேறிய உடன் தர்ஷனின் காதலியான நடிகை சனம் ஷெட்டி அவர்கள் எனக்கு போன் செய்து பேசினார்கள். இவ்வளவு பிரச்சனை நடந்தும் தர்ஷன் உங்களுக்கு முதல் உதவி செய்ய கூட வரவில்லையா!! எனவும், நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் கூறினார். மேலும்,தர்சன் வெளியே வந்ததும் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் இல்லையென்றால் தர்ஷன் உண்மையான “மனுசனே இல்லை” என நடிகை சனம் ஷெட்டி அவர்கள் மதுமிதாவுக்கு ஆறுதல் கூறினாராம். ஆனால், தற்போது வரை நடிகை சனம் ஷெட்டி கூறிய மாதிரி தர்ஷன் நடந்து கொள்ளவில்லை என்றும், சனம் ஷெட்டி சொன்னது போலவே உண்மையாக தர்ஷன் ‘மனுசனே இல்லை’ எனவும் மறைமுகமாக விமர்சித்து வருகிறார் நடிகை மதுமிதா.

Image result for tharshan sanam breakup"

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்திலும் நடிகை மதுமிதா அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும்,நிகழ்ச்சி முடிந்து இவ்வளவு நாட்களாகியும் மதுமிதா பிக்பாஸ் குறித்து பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் கொடுத்துக் கொண்டு தான் வருகிறார். மேலும், மதுமிதா சொல்வது உண்மையா? பொய்யா? பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? என பல கேள்விகளும் தற்போது வரை இணையங்களில் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

-விளம்பரம்-
Advertisement