தர்ஷன் – சனம் பிரச்சனையாக சொன்னது இந்த பிகினி பேட்டியை தான். வீடியோ இதோ.

0
97278
sanam-shetty
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கை மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இந்தநிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரச்சனைதான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Image result for sanam shetty bikini"

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி கூறுகையில் தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தா.ர் ஆனால், தங்களுக்குள் இருக்கும் பிரச்சனை குறித்து பேசிய தர்ஷன், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது சனம் ஷெட்டி வெளியே பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியும் பிகினி உடையில் பேட்டியும் கொடுத்திருந்தா.ர் அது எனக்கு பிரச்சனை இல்லை என்றாலும் அவர் என்னை ப்ரோமோட் செய்யத்தான் பிகினி உடையில் போஸ் கொடுத்ததாக கூறினா.ர் மேலும், அது எனக்கு பிரச்சனை இல்லை என்றாலும் எனது குடும்பத்தார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் தான் எங்கள் இருவருக்கும் பிரச்சினை எழுந்தது என்றும் கூறியிருந்தார் தர்ஷன்.

இதையும் பாருங்க : வீட்டின் முன்பு குவிந்த ரசிகர் கூட்டம். சிம்பு போட்ட ஆட்டம். வீடியோவை பகரிந்த சிம்பு சிஸ்டர்.

-விளம்பரம்-

தர்ஷன் இப்படி கூறியது குறித்து சனம் ஷெட்டி இடமும் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல சனம் ஷெட்டி பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியதால் தான் சில பிரச்சினைகள் வந்ததாகவும் கூறி இருந்தார். இந்தநிலையில் சனம் ஷெட்டி பிகினி உடையில் அளித்த பேட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் நடிகை சனம் ஷெட்டி பிகினி உடையில் ஈட்டிக்கொடுப்பது இதுதான் முதல் முறை என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே, தான் பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தியதாகவும் அந்த புகைப்படங்களை தர்ஷனே எடுத்து அதில் எது சிறந்த போட்டோ என்பதை தேர்வு செய்து அவர்தான் என்னை சமூகவலைதளத்தில் பதிவிட சொன்னார் என்றும் சனம் ஷெட்டி புதிய குண்டை தூக்கிப் போட்டு உள்ளார். எனவே, இவர்கள் இருவரில் யார் சொல்வது தான் உண்மை என்பதே புரியாமல் இருக்கிறது .அதேபோல உண்மையில் இவர்களது பிரச்சனை ஆரம்பித்தது சனம் ஷெட்டி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது தானா என்று சந்தேகமும் வரத்தான் செய்கிறது.

Advertisement