பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் மீரா மிதுன், தர்ஷன் தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பியதாக புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டார். நேற்றய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் மீரா மிதுன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சாக்க்ஷி மீரா மிதுனிடம் நீதானே இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் சொன்னாய் ‘தர்ஷன் என்னை பிடித்திருக்கிறது என்று கூறினார் என்றும், எனது வீட்டில் பெண் கேட்க வரலாமா என்று கேட்பதாகவும் சொன்னாயே’ என்று மீரா மிதுனிடம் கேட்டார்.
அதற்கு தர்ஷன் மீரா மிதுனிடம், எனக்கு உன்னை பிடிக்கும் என்று மட்டுமே தானே சொன்னேன். அதே போல எனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என்றும் நான் சொன்னேனே என்றார். அதற்கு மீரா மிதுனோ, நான் தான் கொஞ்சம் குழம்பிபோய் சாக்க்ஷியிடம் நீ என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறிவிட்டேன் என்றார்.
இதையும் பாருங்க : லாஸ்லியாவிற்கு முத்த மழை பொழிந்த மோகன்.! கண்ட்றோல் செய்த கமல்.!
பின்னர் சாக்க்ஷியோ, தர்ஷனிடம் உனக்கு காதலி இருப்பதை தெளிவாக சொல்லிவிடு என்றார். பின்னர் தர்ஷனும், எனக்கு காதலி இருக்கும் போது நான் ஏன் மீராவிடம் அப்படி சொல்லப்போகிறேன் என்றார். பின்னர் மீரா மிதுன், எனக்கு அவனுக்கு காதலி இருப்பது தெரிந்ததும் நான் விட்டுவிட்டேன் என்றார்.
நேற்றய நிகழ்ச்சியில் தான் தர்ஷனுக்கு காதலி இருப்பதே ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் தர்ஷனின் காதலி யார் என்பது தெரிய வந்துள்ளது. தர்ஹஸினின் காதலியின் பெயர் ஷணம் ஷெட்டி, அவரும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.
இதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ஷணம் ஷெட்டி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீரா மிதுன் தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியது. அதோடு தாங்கள் கொடுத்த பட்டத்தை இனி மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதனால் அந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சனம் ஷெட்டிக்கும் வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.