ப்பா, தர்ஷனா இது. மாடலாக இருந்த போது ரெம்ப் செய்த புகைப்படங்கள்- அவரே வெளியிட்டுள்ளார்.

0
1722
Tharshan
- Advertisement -

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மற்ற இரண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வேற லெவல் பிரபலமானது. உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் மூன்று வருடமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல், நட்பு, சண்டை என கலவரங்களுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை கவர்ந்தது.

-விளம்பரம்-
Image

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தர்ஷன்.இவர் இலங்கையை சேர்ந்த மாடல் ஆவார். இவர் பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான வேறென்ன வேண்டும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தர்ஷன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது நடிகர் கமல், தர்ஷனுக்கு பேட்ச் ஒன்றை குத்தி கமலின் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ் கமல் பிலிம்ஸ் ‘ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட திரிமையாளராக அறிவித்திருந்தார். ஆனால், தர்ஷனுக்கு கமலலிடம் இருந்து இன்னும் எந்த வாய்ப்பும் வரவில்லை.

சமீபத்தில் நடிகர் தர்ஷன், தான் மாடலாக இருந்த போது செய்த ராம்ப் வால்க்களில் இருந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது தர்ஷன்,ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார் என்றும் தகவகள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement