‘அடுத்து பொண்ண கரக்ட் பண்ணி’ தர்ஷன் பதிவிட்ட புகைப்படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
77286
Tharshan-Julie
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கை மாடலான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தார். இந்தநிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டியின் பிரச்சனைதான் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி கூறுகையில் தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும். ஆனால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான் ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும் காதலும் போய்விட்டது..

- Advertisement -

இதையும் பாருங்க : அந்த படம் வெளியான போது நீங்கள் எல்லாம் எங்கிருந்தீங்க? ரசிகர்கள் குறித்து பேட்டியில் புலம்பிய சம்மு.

இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார். இது ஒருபுறம் இருக்க தர்ஷன் மீது சனம் ஷெட்டி பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இப்படி மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த பிரச்சனை துவங்கிய நாளில் இருந்தே தர்ஷன் தனது சமூக வலைதளத்தில் எந்த ஒரு பதிவையும் இதுகுறித்து போடாமல் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தர்ஷன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதில் புதிய ஹேர் ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதனை ஏற்படுத்திய ஸ்டைலுக்கு நன்றி தெரிவித்திருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த பொண்ண கரெக்ட் பண்ணி காசு கரவா இந்த கெட்டப் என்றும், சனம் ஷெட்டி வாங்கிக்கொடுத்த சட்டை என்றும் கண்டமேனிக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். அதிலும் ஒருவர் இது மிகவும் ஆபத்தான புன்னகை. நீங்கள்தான் பிக்பாஸ் 3 ஜூலி. பொய்களைக் கூறி உங்களை நேசித்தவரை காயப்படுத்தும் நபர்தான் நீங்கள். ஜூலியால் பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்ததோ, அது உங்களால் வெளியில் நிஜவாழ்க்கையில் நடைபெறுகிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

Advertisement