கண் கலங்கி வெளியேறிய தர்ஷன்.! மேடையில் உருக்கமான பேச்சு.! எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்.!

0
23228
tharshan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது அடுத்த வாரம் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிய வரும் நிலையில் இந்த வாரம் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இறுதி வாரம் என்பதால் நேரடி போட்டிக்கு தகுதி பெற்ற முகெனை தவிர மற்ற 5 போட்டியாளர்களும் நாமினேஷனில் இடம் பெற்றனர்.

-விளம்பரம்-

ஆனால், ஓட்டிங் முடிய இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கவின் பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறி இருந்தார். இதனால் கடைசி இரண்டு நாளில் யாரும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு இன்று மாலை 6.30 மணிக்கே துவங்கியது. இந்த வாரம் தர்ஷன் வெளியேறினார் என்று கமல் அறிவித்ததும் ரசிகர்கள் மத்தியிலும் போட்டியாளர்கள் மத்தியிலும் பெரும் அமைதியும் அதிர்ச்சியும் நிலவியது. அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் தர்ஷன்.

பின்னர் மேடையில் தர்ஷன் வந்ததும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். அதே போல கமலும், ஏன் இப்படி மக்கள் செய்தார்கள் என்று தெரிவதில்லை இருப்பினும் வந்த வேலையை நீங்கள் முடித்து விடீர்கள் என்று கூறியதும் இந்த வார்த்தையே போதும் சார் எனக்கு என்றார் தர்ஷன்.

-விளம்பரம்-

பேசிய தர்ஷன், இது கடவுள் கொடுத்த வாய்ப்பு, இதை தாண்டினால் நான் ஊருக்கு தான் போக வேண்டும் என்று தான் நினைத்தேன். எனக்கு பிக் பாஸில் கிடைத்தது மிகப்பெரிய அனுபவம். வணிதாவிடம் நான் சண்டை போட்டுள்ளேன் அவர் எனக்கு ஊட்டியும் விட்டுள்ளார். நான் பொதுவாக யாரிடமும் மாட்டேன். ஆனால், உள்ளே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் . முகெனை பார்க்கும் போது நான் பட்ட கஷ்டத்தை பார்ப்பது போல தான் இருந்தது என்று உருக்கமாக பேசினார் தர்ஷன்.

Advertisement