இறுதி போட்டிக்கு யாரெல்லாம் வர போறாங்க தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்.!

0
9860
kamal
- Advertisement -

தொலைக்காட்சி ரசிகர்களின் மாபெரும் பொழுது போக்கு நிகழ்ச்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.

- Advertisement -

இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.

அந்த வகையில் நேற்றய நேற்றய நிகழ்ச்சியில் கவின் மற்றும் தர்ஷன் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்திருந்தனர். மேலும், நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் இன்று மாபெரும் கொண்டாட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . பொதுவாக பிக் பாஸ் இறுதி கொண்டாட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

-விளம்பரம்-

அந்த வகையில் இறுதி போட்டியில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தர்ஷன், முகென் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அந்த புகைப்படத்திற்கு பின்னால் மோகன் வைத்யாவும் அவரது சகோதரரும் இருக்கிறார்.

எனவே, இறுதி போட்டிக்கான கொண்டாட்டத்தில் அணைத்து பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் கலந்து கொண்டது இன்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்ப படுமா இல்லை நாளை ஒளிபரப்ப படுமா என்பது தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் பட்டத்திற்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது . மேலும், இந்த சீசனில் வெற்றி பெற போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

நேற்றுடன் நிறைவடைந்த வாக்குகளின் நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு அதிக என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement