காப்பாற்றப்பட்ட 4 போட்டியாளர்கள். இந்த மூன்று பேரில் ஒருவர் வெளியேற்றம். யார் அது ?

0
3785
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஏழு வாரத்தை நிறைவு கிட்டத்தட்ட பாதி சீசனை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறிய நிலையில் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த்னர். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-153.jpg

ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசி வருகிறார். அதே போல இரண்டாம் போட்டியாளராக வந்த சுசித்ரா, பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை கடந்த வாரம் ரசிகர்கள் அவரை வழியனுப்பி வைத்துவிட்டார்கள்.இந்தவார நோமினேஷனில் சோம், ஆரி, பாலாஜி, அனிதா, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ் ஆகிய 7 பேர் நாமினேட் ஆனார்கள் . அதன் பின்னர் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நாமினேஷனில் இடம்பெற்ற பின்னர் அதிலிருந்து தப்பிக்க புதிதாக ‘Nomination Topple Card’ என்ற ஒரு புதிய பாஸை அறிமுகம் செய்து இருந்து இருந்தனர்.

- Advertisement -

இதை வெற்றி பெரும் நபர் தனக்கு பதிலாக இந்த வாரம் நாமினேட் ஆகாத ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பின்னர் அனிதாவிற்கு இந்த ‘Nomination Topple Card’ கிடைத்தது. பின்னர் தனக்கு பதிலாக சம்யுக்தாவை அனிதா நாமினேட் செய்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்று வந்த ஓட்டிங்கில் ஆரிக்கு அதிக வாக்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

This image has an empty alt attribute; its file name is 2-38.jpg

இந்த வாரம் ஆரி மற்றும் பாலாஜியை தவிற மற்ற 5 பேருக்கும் குறைவான வாக்குகள் தான் வந்தது. அதிலும் பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பில் ஆரம்பத்தில் சம்யுக்தா மற்றும் நிஷாவிற்கு குறைவான வாக்குகள் கிடைத்தது. எனவே, இவர்கள் இருவரில் யாரவாது ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பாலாஜி, ஆரி, சனம், சோம் சேகர் ஆகிய நான்கு பேர் காப்பாற்றப்பட்டு தற்போது சம்யுக்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகிய மூன்று பேர் டேஞ்சர் சோனில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement