போட்டியில் இருந்து வெளியேற பிரியங்கா செய்த செயல் – நறுக்கென்று கேள்வி கேட்ட நிரூப். இதோ லீக்கான வீடியோ.

0
371
priyanka
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 87 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற டிக்கெட் டு பின்னாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த டாஸ்கில் நிரூப்பை பேசி வெளியே அனுப்பி வைத்துவிட்டனர். இதை தொடர்ந்து 7 பேர் இந்த டாஸ்கை தொடர்ந்து வந்தனர். அந்த வகையில் நேற்றய நிகழ்ச்சியில் பாவனி மற்றும் தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

Ticket to finale :

அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்கும் நடுவே மிகப்பெரிய சண்டையே வெடித்தது. இதில் பலரும் பிரியங்காவை தான் திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்றைய மூன்றாம் ப்ரோமோ லீக் ஆகி இருக்கிறது. இதிலும் வாயை பயன்படுத்தியே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மீண்டும் வாயை நம்பியே டாஸ்க் :

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் ‘இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெற கூடாது’ என்று கேள்வி கேட்கப்பட அதற்கு பிரியங்கா, நான் யாரையும் சொல்ல விரும்பவில்லை நான் அதனால் என்னை நானே சொல்லிக்கொள்கிறேன் என்று கூறி தன் மீது முட்டையை எரிந்து போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

வெளியேறிய பிரியங்கா :

இதற்கு பின்னர் பிரியங்காவிடம் பேசிய நிரூப், இந்த கேமிற்கு நீங்கள் உண்மையாக இருந்தீர்களா, ஏன் உங்களுக்கு கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை, என் வாய்ப்பை நீங்கள் தானே கெடுத்தீர்கள். நான் தகுதி இல்லாதவன் என்று முடிவு பண்ணி அனுப்புனீங்க அப்போ நீங்க தகுதியானைவர் தான் என்று நிரூபிக்க வேண்டியது தானே.

-விளம்பரம்-

நிரூப் கேட்ட நச் கேள்வி :

ஆனால், இதே பிரியங்கா தான் இந்த டிக்கெட் டு பினாலே முதல் டாஸ்கில், யார் இந்த டிக்கெட் டு பினாலே டிக்கெட்டை விளையாட தகுதி இல்லாதவர்கள் யார் என்று டாஸ்க் கொடுக்கப்பட்ட போது நிரூப்பின் பெயரை சொன்னார். ஆனால், இப்போது ஒருவரை தகுதி இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார்.

போன சீசன் ஞாபகம் இருக்கா :

பொதுவாக டிக்கெட் டு பினாலே டாஸ்க் என்றால் பிஸிக்கல் டாஸ்காக தான் இருக்கும் அதிலும் கடந்த சீசன்களில் எல்லாம் அணைத்து போட்டியாளர்களும் அனைத்து டாஸ்க்குகளிலும் பங்கேற்று இருந்தனர். மேலும், அவர்களுக்கு தனி தனி மதிப்பெண்களும் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement