தொலைக்காட்சி சீரியல் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகம் வருவது சன் டிவி சேனல் தான். ஏன்னா,சீரியல் என்ற ஒன்னு ஆரம்பித்ததே சன் நிறுவனம் தான். மேலும், பல ஆண்டுகளாகவே சன் டிவியில் ஒளிபரப்பாகு சீரியல்கள் எல்லாமே ‘செம மாஸ்’ காட்டி வருகிறது என்று கூட சொல்லலாம். அது மட்டும் இல்லைங்க சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல குடும்ப தாய்மார்களிடையே அதிக வரவேற்பை பெற்று வெற்றி தொடர்களாக போய்க்கொண்டு உள்ளது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நிறைவடைந்த ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்று இருந்தது. இந்த கண்மணி சீரியலில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்த லீஷா எக்லர்ஸ் என்பவர் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றது.
நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். .லீஷா எக்லர்ஸ் அவர்கள் எம்.சசிகுமார் தயாரிப்பில்,பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பலே வெள்ளைய தேவா’என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
மேலும், இவர் இந்த படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தமிழ் திரைப்பட உலகில் அடிக்காத ஜாக்பாட் தெலுங்கு திரைப்பட உலகில் அடித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒளிபரப்பான பிக்பாஸில் டைட்டில் வெற்றிப் பெற்ற கௌஷன் மந்தன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி லீஷா நடிக்கிறார்