எங்க அப்பா, அம்மா மேல சத்தியமா நீதான் “Title Winner” ஆகணும்..போட்டியாளரிடம் கூறிய யாஷிகா..!

0
748
Yashika-Anand
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இப்போது பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்ற சில தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் காமெடி நடிகர் ஆர்த்தி கூட பிக் பாஸில் மும்தாஜ் அல்லது சென்ராயன் தான் வெற்றி பெறுவார்கள் என்று தனது கருத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

-விளம்பரம்-

yashika

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகிய மூவரும் இந்த நிகழ்ச்சியில் சென்ராயன் தான் வெல்லவார் என்று கூறியுள்ள்ளதை சமீபத்தில் யாஷிகா சென்றயானிடமே தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மஹத் எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். அவரது எலிமினேஷனிற்கு பின்பு பிக் பாஸ் வீட்டில் யாஷிக்கா மற்றும் ஐஸ்வர்யா மற்ற யாரிடமும் அளவளாவிக்கொள்ளாமல் மிகவும் தனித்து காணப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டு தனிமையாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சென்ராயன் அவர்கள் இருவரிடமும் சென்று பேசுகையில், யாஷிகா சென்றயனிடன் “நீங்க எந்த குரூபிலும் இல்ல எல்லார்கிட்டயும் பேசறீங்க, எங்களுக்கு என்ன ஆசனா, இந்த வீட்டோட விண்ணர் நீங்கதான்.” என்றதும் ஐஸ்வர்யாவும் நீங்க தான் வின்னர் என்று கூறுகிறார். பின்னர் யாஷிகா”நான் என்னோட அம்மா மேல, அப்பா மேல சத்தியமா சொல்ற நான்,மஹத், ஐஸ் எல்லாம் டிசைட் பண்ணோம் இந்த வீட்ல யார் ஜெயக்கணும்னு நெனச்சா அது சத்தியமா நீங்க தான்.” என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

sendrayan

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் நேற்று சென்றயானிடன் பேசியதை வைத்து பார்க்கும் போது மஹத்,யாஷிகா,ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் சென்றாயான் தான் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. அதே மற்ற போட்டியாளர்களை ஒப்பிடும் போது சென்ராயன் எல்லா போட்டியாளர்களிடமும் வெகுளி என்ற பெயரை எடுத்துள்ளார். அதே போல மக்களுக்கும் இது வரை சென்ராயன் மீது எந்த ஒரு கெட்ட அபிப்ராயமும் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement