கோடி கணக்குல செலவு பண்ணீங்க…இவ்ளோ கேவலமா பண்ணிட்டிங்களே பிக்பாஸ்.! கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

0
1833
Rithvika
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நேற்றுடன் நிறுவடைந்தது. நேற்றய நிகழ்ச்சியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெற்றியாளர் என்று எதிர்பார்த்த நிலையில் விஜயலக்ஷ்மி வெளியேற்றபட்டு பின்னர் ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகியோர் இடையில் பிக் பாஸ் பட்டத்திற்கான போட்டி நிலவியது.

-விளம்பரம்-

Rithvika

- Advertisement -

மிகவும் கொண்டாட்டமாகவும் கொலைக்களமாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 போட்டியாளரான ஆரவ் மற்றும் ஓவியாவும் சிறப்பு விருந்தினராக வந்திறந்தனர். இந்த சீசனின் வின்னர் ரித்விகா தான் என்று ஏற்கனவே அறிந்திருந்த நிலையில் இறுதியில் ரித்விகாவை வெற்றியாளராக அறிவித்து கோப்பையை வழங்கினார் கமல்.

ரித்விகாவை வெற்றியாளர் என்று அறிவித்தும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வடித்து துள்ளி குதித்தார் ரித்விகா. அவருக்கு 50 லட்ச ருபாய் மற்றும் கோப்பையும் வழங்கபட்டது. ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுத்த பிக் பாஸ் கோப்பையை நீங்கள் நன்றாக கவனித்தீர்களா?

-விளம்பரம்-

கமல் அவர்கள் ரித்விகாவிற்கு கோப்பையை அளித்த சிறிது நொடியிலேயே கோப்பையில் இருந்து வலது பக்கத்தின் ஒரு பகுதி கீழே விழுந்து விட்டது.பின்னர் சிறுது நேரத்தில் அதனை மீண்டும் எடுத்து ஓட்ட வைத்துள்ளனர். இத்தனை கோடிகள் செலவில் உருவாகிய பிக் பாஸ், கோப்பையை மட்டும் இந்த அளவிற்கு மிகவும் தரம் குறைவாக தயாரித்துள்ளனர்.

rithu

நேற்றைய நிகழ்ச்சியில் நீங்கள் நன்றாக உற்று பார்த்து இருந்தால் ரித்விகா கோப்பையுடன் போஸ் கொடுத்திருக்கும் போது கோப்பையின் மேல் புறத்தில் உள்ள வலது பக்கத்தில் மட்டும் ஒரு பகுதி இல்லாமல் இருக்கும். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.

Advertisement