6வது வார நாமிநேஷன், தங்களுக்கு பிடித்த 2 பேரை காப்பாற்றிய போட்டியாளர்கள் – யார் யாரை Save பண்ணது பாருங்க.

0
278
biggboss
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுரேஷ் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

கடந்த வாரம் வெளியேறிய பாலாஜி :

மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்ரவர்த்தி எலிமினேட் ஆகி இருந்தார். அவரை தொடர்ந்து சுஜா வருணி, அபிநய், ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில் கடந்த வாரம் பாலாஜி வெளியேறி இருந்தார். சொல்லப்போனால் பாலாஜி கடந்த வாரமே வெளியேறி இருக்க வேண்டியது. ஆனால், அந்த வாரம் வனிதா தமாகவே வெளியேறியதால் அந்த வாரம் எலிமினேஷன் கைவிடப்பட்டது.

காப்பற்ற நடைபெற்ற நாமினேஷன் :

6 வாரங்கள் கடந்து சென்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் 6ஆம் வார நாமினேஷன் இன்று நடைபெற்றது. இதில் இந்த வாரம் கேப்டன் நிரூப்பை தவிர மற்ற அனைவரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர், அதே போல இந்த வாரம் நாமினேஷன் செய்யாமல் போட்டியாளர்கள் 2 பேரை காப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

அந்த வகையில் யார் யாரை காப்பாற்றினார்கள் என்பதை பார்ப்போம்.

தாமரை – சுருதி, அபிராமி
சினேகன் – சதிஷ், சுரேஷ்
சுருதி – அனிதா, தாமரை
சதிஷ் – சுரேஷ், அனிதா
அனிதா – தாமரை, சினேகன்
அபிராமி – ஜூலி, பாலா
பாலாஜி – தாமரை, சதீஷ்
ஜூலி – சதிஷ், அபிராமி
சுரேஷ் – சதிஷ், தாமரை
நிரூப் – அனிதா, தாமரை

இந்த வாரம் நாமினேஷனில் 4 பேர் :

இதன் அடிப்படையில் இந்த வார நாமிநேஷன் முடிவின்படிசினேகன், சுருதி, பாலாஜி, ஜூலி ஆகிய 4 பேர் மட்டுமே இந்த வாரம் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதில் யார் வெளியேற போகிறார் என்று நீங்கள் நினைக்கிறார்கள் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.

Advertisement