‘அப்புறம் என்ன தமிழ், தமிழ் நாடுன்னுலா சொல்றீங்க’ – முன்னாள் காதலர் முகேன் விஷயத்தில் நடந்தது குறித்து அபிராமி.

0
502
abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் ரசிகர்ளுக்கு பரிட்சியமில்லாத பலர் கலந்துகொண்டனர். அதில் அபிராமியும் ஒருவர். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படமும் வெளியானது. இவர் பரதநாட்டியத்தில் மிகச் சிறந்த கலைஞர் என்றும் சொல்லலாம். இவருடைய அழகு, நடனம், முக பாவனை என அனைத்திலும் சிறந்த கலைஞராக இருந்த நடிகை அபிராமி அவர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

நேர்கொண்ட பார்வை அபிராமி :

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆடை, மதுமிதாவிற்கும் இவருக்கும் இடையே நடந்த கலாச்சாரம் பிரச்சனை, அபிராமி –கவின் காதல், முகென் காதல் என பிக்பாஸ் வீட்டில் எழுந்த இவரது பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை எல்லாம் மறக்கும் வகையில் அஜித்துடன் இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் அமைந்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அபிராமி அவர்கள் சிறப்பான முறையில் நடித்து இருந்தார்.

- Advertisement -

முகேன் மீது காதலில் விழுந்த அபிராமி :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் கூட கமிட் ஆகி இருந்தார் அபிராமி. ஆனால், ஒரு படம் கூட இன்னும் வெளியாக வில்லை. அதே போல இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது முகேன் வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று தெரிந்தும் முகேனை காதலித்தார். ஆனால், முகேன் இவரது காதலை ஏற்கவில்லை. மேலும், ஒரு கட்டத்தில் இவருக்கும் அபிராமிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு முகேன் கட்டிலை ஓங்கி குத்தி உடைத்து இருந்தார்.

முகேன் குறித்து பேசிய அபிராமி :

அது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. பொதுவாக பிக் பாஸ் பொருட்களை சேதப்படுத்துவது விதி மீறல். இதனால் முகேன் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சீசனில் முகேன் தான் டைட்டிலை வென்றார். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார் அபிராமி. பிக் பாஸ் அல்டிமேட்டில் தற்போது பத்திரைக்கையாளர் டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-
I Respect Her For Who She Is: Mugen Rao Opens Up About Abhirami! | JFW Just  for women

இதில் பிக் பாஸ் நட்சித்திர அணியில் இருந்து பேட்டி கொடுத்த அபிராமி ‘மீரா மிதுன் கிட்ட பேசும் போது நீங்க பாத்து இருக்கலாம். டேபிள்ல குத்தறது, செவத்துல குத்தறது எல்லாம் பண்ணாங்க. இத அவர் மீது குற்றம் சொல்ல சொல்லவில்லை. சில பேருக்கு கோபம் டக்குனு வரும். ஆனால், அது தவறு தானே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. அவர் அந்த பெட் உடைச்சதுக்கு அப்புறம் எல்லாரும் அவன்கிட்ட போய் அச்சச்சோனு சொன்னாங்க.

Image

என்ன ரட்சசி மாதிரி உருவாக்குனாங்க :

ஆனால், லாஸ்லியா தான் என்னிடம் வந்து கேட்டால். அவளை தவிர அங்க இருந்த யாரும் கேக்கல. மனிஷத் தன்மை இருக்கனும். அந்த பெட் உடைச்சதுக்கு அப்புறம் அவர் ஒரு பரிதாபம் மாதிரியும் என்ன ராட்சசி மாதிரியும் காட்டினாங்க. என்ன யாரும் கேக்கலையே அப்புறம் என்ன தமிழ் தமிழ்நாடு எல்லாம். நானும் தமிழ் பொண்ணு தானே. நான் தான் என் குடும்பத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement