15 லட்சத்துடன் வெளியேறி ஆட்டத்தையே மாற்றிய சுருதி, வெள்ளிக்கிழமையே வெளியேற்றப்பட்ட கடைசி போட்டியாளர். யார் தெரியுமா ? (வெளிய வந்ததும் ஆட்டம்)

0
670
Suruthi
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது. இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் ஒளிபரப்பி 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-671.jpg

இறுதி வார நாமினேஷன் என்பதால் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பாலா வை நாமினேட் செய்து இருந்தனர். அதே போல நாமினேஷன் இறுதியில் சுருதி மற்றும் அபிராமியை தவிர மற்ற 5 பேரும் நாமினேட் ஆகி இருந்தனர். ஆனால், இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருப்பதாக பிக் பாஸ் ஷாக் கொடுத்து இருந்தார்.

- Advertisement -

15 லட்சத்துடன் வெளியேறிய சுருதி ;

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் இறுதியில் 15 லட்சம் வரை கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இறுதியில் இந்த பணப்பெட்டிக்காக ஜூலி மற்றும் சுருதி ஆகிய இருவருக்கும் போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் சுருதி வென்று 15 லட்ச ரூபாய் பணபபெட்டியுடன் பிக் பாஸ் வீட்டைவிட்டு படு மகிழ்ச்சிக்காக வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ்ஸின் கடைசி எலிமிநேசன் :

சுருதி வெளியேறி இருந்ததால் ஓட்டிங்கில் ரம்யா மற்றும் அபிராமி ஆகிய இருவரும் கடைசி இடத்தில் இருந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் முழுதும் நடைபெற்ற நாமினேஷனில் பல தனியார் வளைதள வாக்கெடுப்பில் சுருதி மற்றும் அபிராமி மற்றும் சுருதி தான் இறுதி இடத்தில் இருந்து வந்தனர். எனவே, இவர்கள் இருவரில் யாரவது தான் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமையே வெளியேறிய அபிராமி :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியாளர் ஷாரிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அபிராமியுடன் இணைந்து ‘பேபி நீ சுகரு’ பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவெனில் அஸ்வின் – லாஸ்லியாவின் ஆல்பம் பாடலான இந்த பாடல் வெளியானதே கடந்த 31 ஆம் தேதி, அதாவது வியாழக்கிழமை தான்.

ஷாரிக் வெளியிட்ட வீடியோ :

ஆனால், ஷாரிக்குடன் இந்த பாடலுக்கு அபிராமி நடனமாடி இருக்கும் வீடியோ நேற்றே ஷாரிக் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் அபிராமி வெளியேறிவிட்டார் என்பது ஒருபுறம் உறுதியானலும். அபிராமி வெள்ளிக்கிழமையே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர். இதன் மூலம் பிக் பாஸ் அல்டிமேட் பைனலுக்கு பாலாஜி, நிரூப், ஜூலி, தாமரை மற்றும் ரம்யா தகுதி பெற்று இருக்கின்றனர்.

Advertisement