தற்போது விஜய் டிவி பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோக்களில் ஒரு மணி நேரம் போல் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. அதோடு இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொடங்கி இருக்கிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.
இதில் நிரூப் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் நடிகை யாஷிகா ஆனந்த்துடன் நிரூப் காதலில் இருந்தது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே தெரியும். அதோடு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததே யாஷிகா ஆனந்த் மூலம் தான் என்று நிரூப்பே வெளிப்படையாக கூறி இருந்தார். மேலும், அபிராமியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி:
தற்போது மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது. மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போகிறது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நிகழ்ச்சியில் செலிபிரிட்டி vs பிரஸ் மீட் என்ற டாஸ்க் நடக்கிறது.
செலிபிரிட்டி vs பிரஸ் மீட் டாஸ்க் :
அதில் அபிராமி, நிரூப்பிடம் பிக்பாஸ் வீட்டில் உங்களுடைய எக்ஸை சந்தித்தால் உங்களுடைய அந்த நிமிஷம் எப்படி இருந்தது என்று கேட்கிறார். அதற்கு நிரூப், நீங்கள் தான் அந்த எக்ஸ். உங்களை இங்கு முதலில் பார்க்கும் போது நிறைய பேசலாம் என்று தோன்றியது. ஆனால், என்னால் எதுவும் பேச முடியவில்லை. வரபோகும் நாட்களில் பார்க்கலாம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். உடனே அபிராமி, இதை வைத்து பலரும் பலவிதமான மீம்ஸ் போட்டு வருகிறார்கள். அதற்காகத்தான் நான் இதைக் கேட்டேன் என்று கூறினார்.
அபிராமி, நிரூப்பிடம் கேட்ட கேள்வி:
பின் இந்த டாஸ்க் முடிந்தவுடன் அபிராமி, நிரூப்பிடம் வந்து பசர் அடிக்க வேண்டும் என்பதற்காக தான் நான் இந்த கேள்வியை கேட்டேன் என்று சொல்ல நிரூப்பும் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூலாக சொல்லி சென்றுவிட்டார். ஆனால், அங்கிருந்த பிற போட்டியாளர்களுக்கு தான் இந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. இதனைத்தொடர்ந்து போட்டியாளர்கள் பலரும் அபிராமி, நிரூப் இருவரிடமும் தனித்தனியாக இதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். அப்போது இருவருமே விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் முதல் நாளில் நடந்த நாமினேஷனில் இரண்டு பேருமே மாற்றி மாற்றி நாமினேட் செய்து இருந்தார்கள். அதற்கான விளக்கத்தையும் நிரூப் சொல்லியிருந்தார். அதில் அவர், நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன்.
விளக்கம் கொடுத்த நிரூப்:
அப்போது இருந்த அபிராமி இப்போது இல்லை. அவர் நிறைய மாறி விட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் இங்க பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதேபோல ஸ்ருதி, அபியிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார். அதற்கு அபிராமி, நாங்க ரெண்டு பேரும் டீசன்டாக பேசி தான் பிரிந்தோம். அதுமட்டுமில்லாமல் எங்களைப் பற்றி பல மீமிஸ்,ட்ரோல்ஸ் எல்லாம் பயங்கரமாக வந்து இருக்கிறது. அதை தெளிவுபடுத்துவதற்காக தான் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அது மட்டும் இல்லாமல் இதைப்பற்றி ஓபன் ஆக பேசுவதற்கு எங்களுக்கு எந்த ஒரு அசிங்கமும், பிரச்சனையும் கிடையாது என்று அபிராமி சொல்லியிருக்கிறார்.