பாவனி fansனால தான் Finals போனாங்க, நீ தான் போய் இருக்கனும் – பாவனி கேமை குறை சொன்ன அனிதா. வீடீயோவை பகிர்ந்து வெளுத்து வாங்கிய Fatman.

0
444
ravi
- Advertisement -

தற்போது இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சென்று கொண்டு இருக்கிறது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பேருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வாய்ப்புகள் அதிகம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருடைய பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது.

-விளம்பரம்-

பிறகு இவர் படங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வந்தார். தற்போது இவர் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் அனிதா பேசியிருக்கும் விஷயத்திற்கு தயாரிப்பாளரும், பிக்பாஸ் விமர்சகருமான ரவீந்திரன் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் போட்டியாளர்களை குறித்தும் விமர்சித்து வருபவர் ரவீந்தர். இவர் மிகப் பிரபலமான தயாரிப்பாளரும் ஆவார்.

- Advertisement -

அனிதா – ரவீந்திரன் மோதல் :

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் அதில் வரும் போட்டியாளர்கள் குறித்து பலவிதமாக விமர்சித்து பதிவு போடுவார். அந்த வகையில் இவர் அனிதா, பாலாஜி குறித்து விமர்சித்து பதிவு போட்டு இருந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பாலாஜி, அனிதா மற்றும் ரவீந்தர் மூவருக்குமே ஒரு பெரிய வாக்குவாதம் நடந்தது. பின் பாலாஜி அவரிடம் பேசி சமாதானம் ஆனார்.

பிறகு ரவீந்தர் தயாரிப்பிலேயே ஒரு படத்திலும் கமிட் ஆனார் பாலாஜி. ஆனால், அனிதா- ரவீந்தர் பிரச்சனை ஓயவே இல்லை. இருவரும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.இப்படி இருக்கும் நிலையில் தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கும் அனிதா குறித்து ரவீந்தர் மீண்டுமொரு பதிவு போட்டு இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

-விளம்பரம்-

பாவனி குறித்து பேசிய அனிதா :

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனிதா, தொடர்ந்து மற்றவர்களை பற்றி தான் அதிகம் குறை சொல்லி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாவனி குறித்து பேசி இருந்தார். அதில், பாவனி என்ன விளையாட்டு விளையாடினார் என்று அவர் எல்லாம் மூன்றாவது இடத்திற்கு வந்து இருக்கிறார். சொல்லப்போனால் நீ வந்து இருக்க வேண்டும் நிரூப். பாவனி பிக் பாஸில் அமீரை லவ் பண்ணதை தவிர வேறு ஒன்றும் பண்ணவில்லை.

கடுப்பான ரவீந்திரன் :

அவர் என்ன கேம் ஆடினார். அவரின் ரசிகர்களால் தான் அவர் பைனல் வரை வந்தார் என்று கூறி இருந்தார் அனிதா. இந்த வீடியோவால் பாவனியின் ரசிகர்கள் அனிதாவை திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார் ரவீந்திரன், அனிதா, பாவனிய கேம் பத்தி விமர்சனம் செய்வது மிகவும் கேவலம். பாவணி, அந்த கேம் முழுதும் சகிப்புத்தன்மை மற்றும் மனிதாபிமானத்துடன் முகத்தில் சிரிப்போடு இருந்தது தான் சிறந்த உதாரணம். நீங்கள் முந்தைய சீசனிலும் தற்போதும் எப்படி இருந்து வருகிறீர்கள் என்பது தான் கேள்வி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement