அவர் கொழந்த என் வயித்துல வளருது – சர்ச்சையை ஏற்படுத்திய அனிதா சம்பத் பேச்சு (இதுவே மத்தவங்க சொல்லி இருந்தா)

0
805
Anitha
- Advertisement -

பிக்பாஸ்ஸோட குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என்று அனிதா சம்பத் கூறியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இதில் ராஜு முதல் இடத்தையும், 2-ஆம் இடத்தை பிரியங்காவும் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் டிவி அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து உள்ளது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி :

மேலும், முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ, வனிதா குழாய் அடி சண்டை, நிரூப் முன்னாள் காதல் என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சைகள் கிளப்பி இருந்தது. அதோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம், கலவரம் தொடங்கி விட்டது. இதனால் போட்டியாளர்கள் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எது பேசினாலும் கண்டன்ட் ஆகிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் எல்லை மீறல்:

அதோடு சில போட்டியாளர்கள் கண்டன்ட்டுக்காகவே பேசுகிறார்கள். இதை வைத்து சோஷியல் மீடியாவில் பல்வேறு விதமான மீம்ஸ், ட்ரோல் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பிக்பாஸை கேலியும், கிண்டலும் செய்யும் வகையில் நிஷாவும் பிரியங்காவும் பேசியிருந்தார்கள். இது எல்லை மீறாமல் நகைச்சுவை என்பதால் பலர் மத்தியிலும் சுவாரசியமாக இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக் பாஸ் குழந்தை என் வயிற்றில் வளர்கிறது என அனிதா சம்பத் கூறியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா செய்த காரியம்:

அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை, அனிதா, ஜூலி மூவரும் அமர்ந்து காமெடியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அனிதா பிக்பாஸ் உடைய லிட்டில் பாஸ் என்னுடைய வயிற்றில் வளர்கிறது என்று சொன்னவுடன் ஜூலியும், தாமரையும் பயங்கரமாக கத்தி கூச்சல் போடுகிறார்கள். பின் ஜூலி, அணிதாவின் தலையை முடித்து ஆடி பாட்டு பாடி இருக்கிறார். உடனே அனிதாவும், தாமரையும் பிக் பாஸ் உங்க மனைவியை எப்படி பண்ணுகிறார்கள்? பாருங்கள் என்று பிக் பாஸ் மனைவியாகவே அனிதா மாறி காமெடி செய்திருக்கிறார்.

anitha

விமர்சித்து வரும் ரசிகர்கள்:

இப்படி இவர்கள் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கண்டித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதிலும் சிலர் காமெடி பண்ணலாம் அதற்கு இந்த அளவிற்கு மோசமாக செய்ய தேவையில்லை என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். இருப்பினும் சிலர் இது காமெடியாக பார்க்கலாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இதற்கு பிக்பாஸ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பார்க்கலாம்.

Advertisement