பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா ? செம Twist போங்க.

0
252
biggboss
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-390-1024x442.jpg

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் அனிதா, சுருதி, நிரூப், தாமரை, ஜூலி,சதீஷ் ஆகிய 6 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் சமூக வலைதளத்தில் பல ஹேட்டர்ஸ்களை சம்பாதித்த ஜூலி இந்த சீசனில் நல்ல பெயரை எடுத்து வருவதால் அவர் இந்த வாரம் பல வலைதளத்தில் நடத்தட்ட வாக்கெடுப்பில் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

- Advertisement -

டாப்பில் வந்த ஜூலி :

ஜூலியை தொடர்ந்து தொடர்ந்து தாமரை மற்றும் நிரூப் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்து வந்தனர். எனவேய, சதீஷ், அனிதா, சுருதி ஆகிய மூவரில் யாரவது வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் சதிஷ் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

This image has an empty alt attribute; its file name is image-98.png

வெளியேறிய அனிதா :

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதாவின் பெயர் தான் தொடர்ந்து டேமேஜ் ஆகி வருகிறது. 4ஆம் சீசனில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கினார் அனிதா. அதே பாணியை இந்த சீசனிலும் கடைபிடித்து வந்தாலும் அது அவருக்கே வினையாக முடிந்துவிட்டது. தான் விளையாடுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று தான் அனிதா அதிகம் யோசித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பெயரை கெடுத்து வந்த அனிதா :

அதே போல 4ஆம் சீசனில் இவர் சுமங்கலி பஞ்சாயத்து குறித்து பேசி காமலிடமே கைதட்டலை வாங்கினார். ஆனால், இந்த சீசனில் இருக்கும் அனிதாவே வேறு.இந்த சீசனில் அனிதா பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர்.

படு ஆபாசமாக பேசி வந்த அனிதா :

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட நிரூப் மற்றும் அனிதா பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது நிரூப், அந்த ரெண்டு பாட்டில எடுத்து உள்ளே வை என்று அனிதாவிடம் நிரூப் சொல்ல அதற்கு அனிதா சூ* வைப்பாங்க. நான் ஏன் வைக்கணும், அது யார் பாட்டிலோ அவங்கல வைக்க சொல்லு போடா என்று படு கொச்சையாக பேசி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படி அடிக்கடி பெயரை கெடுத்துக்கொண்டு வந்தார் அனிதா. இதுவே இவரின் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

Advertisement