Bigg Boss Tamil : பாலாஜி Elimination prankற்கு முன் Prankற்கு பின் வனிதாவின் ரியாக்ஷன் – முழு வீடியோ இதோ.

0
513
vanitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து உள்ளது . இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா ஒருவரை விடாமல் கொளுத்தி போட்டு வருகிறார். அதிலும் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் எவிக்ஷன்:

அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து இந்த மூன்றாவது வாரத்திற்கான நாமினேட் டாஸ்க் நடந்தது. யாரைக் காப்பாற்றுவீர்கள் என்ற டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேருக்கு ரோஸ் கொடுத்து காப்பாற்றலாம் என்று அறிவித்து இருந்தார்கள். இதில் அதிகமாக ரோஸ் வைத்து இருப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பாலாஜி வெளியேற்றதால் வனிதா ரியாக்ஷன்:

அந்த வகையில் குறைந்த ரோஸ் வாங்கி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் நிரூப், சினேகன், ஜூலி, ஷாரிக், அனிதா, பாலாஜி முருகதாஸ், அபிநய், தாமரை, தாடி பாலாஜி பெற்றிருந்தனர். அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இரண்டு எலிமினேஷன் என்று பிக் பாஸ் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று மூன்றாவது வாரம் எவிக்ஷன் நடந்தது. இதில் ஆரம்பத்தில் கமலஹாசன் பாலாஜி தான் வெளியேற போகிறார் என்று கூறினார். பிறகு பாலாஜி பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே செல்லும் கதை வரை வந்த உடனே கமல் பிராங்க் என்று சொல்லிவிட்டார். பாலாஜி வெளியேறுவதை அறிந்தவுடன் வனிதா பயங்கர சந்தோசமாக இருந்தார்.

-விளம்பரம்-

வனிதா-பாலாஜி மோதல்:

ஏன் என்றால், பாலாஜிக்கும், வனிதாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல பிரச்சனைகள் பல சண்டைகள் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் வீட்டில் வனிதா அதிகம் பாலாஜி உடன் தான் சண்டை போட்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இருவரும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் போல ஒருவரை ஒருவர் தாக்கி சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். சில தினங்களுக்கு முன்பு கூட வனிதா, நான் அப்படித்தான் பத்த வைத்தேன் என்று சொன்னவுடன் பாலாஜி வத்திக்குச்சி நமது போச்சு என்றெல்லாம் கிண்டல் செய்து இருந்தார். உடனே வனிதாவுக்கும் பாலாஜிக்கும் பயங்கர விவாதம் நடந்தது.

மூன்றாம் வாரம் எவிக்ஷன்:

இப்படி இருவருக்கும் மோதல் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கமலஹாசன் பாலாஜி தான் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார் என்று சொன்னவுடன் வனிதா உடைய முகத்தில் அப்படியே 100வாட்ஸ் பல்ப் எரிந்தது. ஆனால், அது பிராங்க் பாலாஜி எலிமினேட் ஆகவில்லை என்று சொன்னவுடன் வனிதாவின் முகம் அப்படியே மாறிப் போய்விட்டது. ஐயோ, இவன் போலயே என்று வனிதா சோகத்தில் இருந்தார். பிறகு நேற்று அபிநய் மற்றும் சாரிக் தான் வெளியேறி இருந்தார்கள். இப்படி பாலாஜி வெளியே செல்லும் போது வனிதா ரியாக்சன் பற்றிய வீடியோக்கள் எல்லாம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement